Friday, 19 August 2011

அண்ணா ஹசரேயின் பின்னால் மக்கள் திரள்கிறார்கள்!சுதந்திரம் வங்கி இத்தனை ஆண்டுகள் ஆகியும் ஒவ்வொரு இந்தியனின் வாழ்க்கையும் போராட்டமே! கல்வி,மருத்துவம்,நீர், அரசின் கடமை ஆனால் காசு கொடுத்து வாங்கவேண்டியத்தை இலவசமாகவும் , இலவசமாக இருக்கவேன்டியதை வியாபாரமாக ஆக்கிவிட்டார்கள் நம்முடைய தலைவர்கள்!மெத்தபடித்த மேதைகளால் சாமான்யனின் கஷ்டம் தீராது! இந்திய அரசியல்வாதிகளின் முகமூடி கிழிகிறது!உண்மை சுடும்! தற்போதைய துவக்கம் காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சியின் துவக்கமே! இதுவரை இருந்த அரசுகளிலேயே மக்களை பற்றி யோசிக்காத மிக மோசமான அரசு மன்மொஹன்சிங்கின் அரசுதான்! பெரும் பணக்காரர்களை காப்பதே கடமையாகிவிட்டது!சுதந்திரத்திற்கு போராடிய காங்கிரஸ் அல்ல இது! சத்யகிரஹத்தையும் அஹிம்சையையும் அவர்கள் மறந்து விட்டார்கள்!தற்போது பதவியும்,ஊழலும் அவர்கள் கொள்கை!நேரு குடும்பத்தின் சொத்தகிவிட்டது காங்கிரஸ்,பதவிக்காக எதையும் செய்யும்! தப்பு செய்தால் தண்டிக்கப்படவேண்டும்! சாமான்யனுக்கு ஒரு நீதி, அரசியல்வாதிகளுக்கு ஒரு நீதியா? ஊழல் அரசியல்வாதியை நீக்கவோ,தண்டிக்கவோ ஏன் ஐந்து வருடம் காத்திருக்கவேண்டும்? ஜனநாயகத்தின் உண்மையான எஜமானர்கள் மக்கள் என்றால், ஏன் சட்டம் கொண்டுவரமுடியாது?இந்திய அரசியல்வாதிகள் ஜனநாயகம் என்று இன்னும் நம்மை எத்தனை காலம்தான் ஏமாற்றுவது?உண்மையில் வாக்காளர்கள் ஓட்டுப்போடும் அன்று மட்டுமே எஜமானர்கள்! இந்தியாவை காக்க போலி ஜனநாயகம் சரிப்படாது, மக்களுடைய கருத்தின்படி இந்திய அரசியல் சட்டம் மாற்றப்படவேண்டும்! ஊழல் செய்தவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்படவேண்டும்!

No comments:

Post a Comment