கலைஞர் "டிவி' எப்படி செயல்படுகிறது என்று எனக்குத் தெரியாது. அதன் செயல்பாட்டிற்கும், எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை' என, ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள, ராஜ்யசபா எம்.பி., கனிமொழி, சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் நேற்று தெரிவித்தார்.
கனிமொழி : கலைஞர் "டிவி' எப்படி செயல்படுகிறது என்பதே எனக்கு தெரியாது.
நீதிபதி : உனக்கு என்னதான் தெரியும்.
கனிமொழி : என் அப்பா மாதிரி பொய் சொல்ல தெரியும், ஊர அடிச்சி நிறைய சொத்து வாங்க தெரியும், நிரடியா கூட பேச தெரியும், மங்காத ஆட தெரியும்,மானாட மயிலாட பாக்க தெரியும். எழுதுற கவிதையை பள்ளி பாட புத்தகத்துல எழுத தெரியும். எனக்கு ஒரு பிரசனை என்றால் ராசாவையும், சரத்தையும் மாட்டி விடவும் தெரியும். அழகிரிக்கு தொல்லை தரும் ஸ்டாலினை திகாருக்கு கொண்டு வரும் வித்தை தெரியும் ! கடைசியா கலைஞர் "டிவி' எப்படி செயல்படுகிறது என்பதே எனக்கு தெரியாது என்று புருடா உட தெரியும்
கனிமொழிக்கு கலைஞர் டிவி பற்றியே மறந்து போயிருக்கலாம்..கலைஞர் டிவி மட்டுமல்ல கலைஞர் என்பவர் யார் என்றே எனக்கு தெரியாது என்று கூட சொல்லலாம்...அடுத்து நாளைக்கே தயாநிதி உள்ளே போயி சொல்வார்." எனக்கு தூக்கத்தில் நடக்கும் வியாதி..அதனால் நான் தூக்கத்தில் நடந்து போயி , எங்கள் வீட்டுக்கும், சன் டிவி ஆபிசுக்கும் கேபிள் பதித்திருக்கலாம்... அதற்க்கு நான் பொறுப்பல்ல " என்று........ ராசா சொல்வார் , " நான் மத்திய அமைச்சராக பன்னிரண்டு வருடம் இருந்தாலும் , கையெழுத்து போட சொன்ன இடத்தில் கையெழுத்து போட்டேன்...ஆனால் யார் கை எழுத்து போட சொன்னார்கள் என்பது நினைவுக்கு வர இன்னும் ஒரு இருபது ஆண்டுகள் பிடிக்கும்.."....என்று கூறலாம்.....அஞ்சா நெஞ்சனோ உள்ளே போனால் இப்படி கூறலாம், " நான் யார் என்பதே எனக்கு தெரியாது! பக்கத்தில் இருக்கும் அட்டேக் பாண்டியை வேணும்னா கேட்டுக்கங்க எசமான் " என்று கூறி தப்பிக்க முயலலாம்.
No comments:
Post a Comment