Tuesday, 16 August 2011

என்னய்யா எரும மாட்டு மேல மழை பெஞ்சா மாதிரியே இருப்பீங்க.. ஊழல் னா ஒங்களுக்கு என்னன்னு தெரியலையா

தமிழகத்தை தவிர்த்து.. இங்கு உள்ள மனிதர்களை கண்டால் வெறுப்பாக இருக்கிறது.. அப்பிடி என்னய்யா எரும மாட்டு மேல மழை பெஞ்சா மாதிரியே இருப்பீங்க.. ஊழல் னா ஒங்களுக்கு என்னன்னு தெரியலையா? திராவிட கட்சிகள் வட நாட்டுகாரனை எதிரியா உங்ககிட்ட காட்டிட்டானுங்க.. நீங்களும் ஊழல் எதிர்ப்பு வட நாட்டு காரனுங்களுக்கு நமக்கு இல்லைன்னு உக்காந்துகிட்டு இருக்கீங்க.. வேற்றுமையில் ஒற்றுமை காண்போம் வாங்க.. அண்ணா ஒன்னும் makkkali  காப்பாத்த உண்ணாவிரதம் கூப்பிடல.. நாட்ட காப்பாத்த கூப்பிடறாரு..

நேற்று தமிழர்களை விட வடஇந்தியர்கள் பெரும்பாலனோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர் . அனைத்து எதிர் கட்சிகளும் ஆதரவு கொடுக்கின்றன. ஆனால் ஆளும் தரப்பு எபோழுதும் ஆதரவு தெரிவிப்பதிலை . இதற்கு உதாரணம் ஜெயா, கேரளா முதல்வர் போன்றவர்கள். ஏன் இவர்களும் மோடி ,நிதிஷ் போன்ற முதல்வர்கள் மாதிரி சப்போர்ட் பண்ணலாம்ல . இபொழுது இருக்கும் அரசியல் வாதிகளை மாற்றி மாணவர் இயக்கம் ஏற்படுத்தி திறமையான மாணவர்களுக்கு முதல்வராகவும் , பிரதமராகவும் வாய்பளிக்க வேண்டும் ....
யார் சொன்னது இந்தியா ஊழல் நாடு என்று? பாருங்கள் எத்தனை எழுச்சி? இந்தியர்கள் ஊழலை விரும்பவில்லை. சில கயவர்களை களை எடுத்தால் எல்லாம் சரியாகும். புதிய இந்தியா உருவாகட்டும்

No comments:

Post a Comment