கருணாநிதியின் கண்துடைப்பு நாடகங்கள் முதல்வர் பேசும்போது குறிப்பிட்டதாவது: "அனைத்துக்கட்சி கூட்டம், சட்டசபை கட்சித் தலைவர்கள் கூட்டம், சட்டசபையில் தீர்மானம், மனிதச் சங்கிலி போராட்டம், பிரதமருக்கு தந்தி, எம்.பி.,க்கள் ராஜினாமா என்ற அறிவிப்பு, ராஜினாமா கடிதங்களை தானே பெற்றுக்கொண்டது, இறுதி எச்சரிக்கை என்ற அறிவிப்பு' என, பல்வேறு வகையான கண்துடைப்பு நாடகங்களை முன்னாள் முதல்வர் கருணாநிதி நடத்தியபோது, கோத்தபய ராஜபக்ஷே வாய் திறக்கவில்லை. ஆனால், நான் கொண்டுவந்த தீர்மானத்தை விமர்சிக்கிறார் என்றால், அந்தளவிற்கு இந்தத் தீர்மானத்தின் தாக்கம் இருந்திருக்கிறது என்பதை, சபை உறுப்பினர்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன். இவ்வாறு முதல்வர் குறிப்பிட்டார்.
தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து விமர்சனம் செய்துள்ள கோத்தபய ராஜபக்ஷேக்கு, இந்தியத் தூதர் மூலம், மத்திய அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும். இலங்கைத் தமிழர்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை, தமிழக அரசு ஓயாது. இலங்கைத் தமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்கத் தேவையான ராஜதந்திர நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்கும்,'' என, சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா பேசினார்.இலங்கைத் தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்படும் வரை, இலங்கைத் தமிழர்கள், தங்கள் சொந்த இடங்களில் மீண்டும் குடியமர்த்தப்படும் வரை, சிங்களர்களுக்கு இணையான அந்தஸ்து அவர்களுக்கும் கிடைக்கும் வரை, என் தலைமையிலான அரசு ஓயாது. தமிழர்களின் நியாயமான உரிமைகளை வென்றெடுக்க தேவையான ராஜதந்திர நடவடிக்கைகளை என் அரசு எடுக்கும். தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு உள்நோக்கம் கற்பிக்கும் வகையில் பேட்டியளித்துள்ள கோத்தபய ராஜபக்ஷேக்கு, இந்திய தூதர் மூலம், தன் கண்டனத்தை மத்திய அரசு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் பேசினார் முதல்வர்.
No comments:
Post a Comment