Tuesday, 16 August 2011

அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக நாடு முழுவதும் எழுச்சி அலை

வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி அன்னா ஹசாரேவும், அவரது குழுவினரும், சுதந்திர தினத்திற்கு மறுநாள் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்திருந்தனர்.நேற்று முன்தினம் ராஜ்காட் சென்று, காந்தி சமாதி முன் பிரார்த்தனை செய்துவிட்டு திரும்பியவுடன், நிருபர்களை சந்தித்து ஹசாரே பேட்டியளித்தார்.

இதையடுத்து நேற்று காலை டில்லியில் அன்னா ஹசாரே கைது செய்யப்பட்டார். அவரைத்தொடர்ந்து அவரது ஆதரவாளர்களான அரவிந்த் கெஜ்ரிவால், சாந்தி பூஷன், கிரண்பேடி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். சாந்தி பூஷன் மற்றும் கிரண்பேடி ஆகியோர் நேற்று மாலை விடுதலை செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட அன்னா ஹசாரே வடக்கு டில்லியில் உள்ள ஆபிசர்ஸ் மெஸ்சில் தங்க வைக்கப்பட்டார். அங்கு சென்ற நீதிபதிகள், ஹசாரேவிடம் சில உறுதிமொழிகள் கோர, அதை ஹசாரே மறுத்ததையடுத்து, அவரை 7 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டனர். அவருடன் கெஜ்ரிவாலும் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், ஹசாரே கைது செய்யப்பட்டதைக்கண்டித்து நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. பல்வேறு நகரங்களில் ஹசாரேவுக்கு ஆதரவாக உண்ணாவிரதப்போராட்டம் நடந்தது. இதில் பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment