Did you forget this video
தமிழகத்தில் அன்றாடம் நடைபெறும் சட்டம்- ஒழுங்கு சீர்குலைவு நிகழ்வுகளின் பட்டியலே மூச்சு முட்டுகிறது' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். தற்குள், இளம்பெண்கள், மூதாட்டிகளிடம் செயின் பறிப்பு, வீடுகளில் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை, கொலை, தற்கொலை, கற்பழிப்பு, வழிப்பறி, கோஷ்டி மோதல், கஞ்சா பறிமுதல், தி.மு.க., பிரமுகர்கள் படுகொலை, வாகன கடத்தல், அ.தி.மு.க., பிரமுகர் போலீசுடன் மோதல், விசாரணை கைதி மர்ம சாவு, கைதி தப்பியோட்டம், குழந்தை கடத்தல், மாணவி கடத்தல், பட்டதாரி பெண் எரித்து கொலை, வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி, வெளிமாநிலங்களிலிருந்து மதுபானம் கடத்தல், போலீஸ் நிலையத்தில் குண்டு வெடிப்பு என, கடந்த மூன்று மாதங்களில் தமிழகத்தில் அன்றாடம் நடைபெறும் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு நிகழ்வுகள் பற்றி நாளிதழ்களில் வரும் செய்திகளை பட்டியலிடவே மூச்சு முட்டுகிறது.
உங்க மருமகள் காந்தி அழகரி, நாகநாதர் கோயிலுக்கு சொந்தமான 17 ஏக்கர் நிலத்தை லாட்டரி அதிபர் மார்ட்டின் மூலம், தன் பெயருக்கு பதிவு செய்துகொண்டது, உங்க வீரபாண்டி ஆறுமுகம் செய்த நில அபகரிப்பு, உங்க சன் டிவி பேரன்கள் அடித்த கொள்ளைகளை நினைதால் எங்க மூச்சு முட்டுகிறது.
இவர் மீதும் இவரது பேரன் மீதும்..200 கோடி மதிப்புள்ள நிலத்தை இவரும் இவரது பேரனின் "ஆசிர்வாதத்துடன்" அபகரிக்கப்பட்ட நிலம் பற்றிய புகார்..! எப்படியும் அம்மா அவர்கள் விட மாட்டார்கள். அதன் "பயம்" கலந்த அறிக்கைதான் இது. இவர் சென்ற மாதம் திருமணம் முடிந்ததும் இந்த மாதம் பிள்ளைபேறு எங்கே என்று கேட்கும் "மாமியார்" போல..!! ஐயா உமது ஆட்சியில் திருடினால்..அந்த திருடனோ கொள்ளைக்காரனோ.. போலிசின் "ஈரல்" கேட்டுப்போனதாய் சொன்னது எப்படி..!? உமது "டாக்டர்" பட்டம் வாங்க எதிர்ப்பினை தெரிவித்து அண்ணாமலை பல்கலையில் ஓர் "நாய்க்கு" டாக்டர் பட்டம் கொடுத்து மகிழ்ந்த மாணவர்களில் "உதயகுமார்" என்கிற மாணவரை ஓட ஓட அடித்து கொன்றதும்..பின்னர் அந்த மகனின் தந்தையை தனது "மகனே' இல்லை என்று சொல்லவைத்த "உருக்கமான" கதையையும் அறியாத இன்றைய இளைஞர்கள் வேண்டுமானால் இன்றைய உமது "நீலிக்கண்ணீர்' மூச்சு திணறல் அறிக்கையை ஐயோ பாவமே என்பார்கள்..! நீர் எப்படி போலிசை பயன்படுத்தினீர் என்பதற்கு இதனை விட ஓர் உதாரணம் வேண்டுமா..?கொலையோ கொள்ளையோ எதுவாயினும்..நில ஆக்கிரமிப்போ..அல்லது அடித்து பிடுங்கியதோ..எதுவாயினும்...மணல் கொள்ளையோ..அரிசி கடத்தலோ..எதுவாயினும்...ஸ்பெக்ட்ரம் போன்ற ஊழலோ..கலப்பட மருந்து ஊழலால் பெற்ற பி.எம்.டபிள்யு போன்ற பெரும்புள்ளிகளின் ஊழலோ..எதுவாயினும்..ராசாவோ..ராசாத்தியோ..யாராயினும்..சாதிக் என்கிற அப்ப்ரூவரின் மரணமோ..அல்லது தற்கொலை செய்ய தூண்டியவர்கள் யாராயினும்..டாடா போன்ற பெரிய தொழில் அதிபர்களின் கட்டிடம் விற்ற ஊழலோ..அதில் சம்பந்தப்பட்டவர்கள் யாராயினும்..மதுரை லீலாவதி போன்ற அரசியல்வாதிகளின் கொலையோ..தா.கி.போன்ற எதிர்க்கட்சிக்காரர்களின் கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் யாராயினும்..வட்டமோ மாவட்டமோ..மந்திரியோ..அல்லது அதற்கும் மேல் உள்ள பதவியில் உள்ளோரின் வாரிசுகளோ யாராயினும் அம்மாவின் ஆட்சியில் அதிலும் போலிசின் "கழுகு"பார்வையிலிருந்து தப்பித்துவிட்டோம் என்று எண்ணி வேண்டாமே இது போன்ற அறிக்கை..!! மத்திய அமைச்சர் பதவியிலே கூட இருந்தாலும் "தப்பிக்கவே" முடியாது.!! உமது அறிக்கை மூச்சு முட்டுமானால் அதற்க்கு அம்மாவிற்கு ஒட்டு மொத்த தமிழகமே நன்றி சொல்லும்..உலக தமிழினம் அனைவருமே வாழ்த்து சொல்லும்..மூச்சு முட்டும் செய்தி நல்லதுதானே..!??
No comments:
Post a Comment