உலக தொலை காட்சிகளில் முதல் முறையாக உங்கள் கலைஞர் டிவியில் தீபாவளி அன்று வெளிவர இருக்கும் நிகழ்சிகளின் ஒரு கண்ணோட்டம்.....
- காலை ஆறு மணிக்கு வீர பாண்டியாரின் வலுக்கும் தமிழகம், கசக்கும் சேலம்.
- எழு மணிக்கு எனது புலம்பல் தொகுத்து வழங்குபவர் முக
- எட்டு மணிக்கு ஸ்டாலின் வழங்கும் நானும் ஒரு ரவுடிதான் காமடி ஷோ
- ஒன்பது மணிக்கு நீயா நானா சிறப்பு விருந்தினர் ஸ்டாலின்,அழகிரி
- பத்து மணிக்கு சிறைக்கு வந்து சிலமாதங்களே ஆன திகாரில் ஒரு சர்காரு புத்தம் புதிய திரைப்படம்.
- ஒரு மணிக்கு தலைமை பதவி யாருக்கு? அன்பழகன் தலைமையில் ஒரு சிறப்பு பட்டிமன்றம்
- மதியம் ரெண்டரை மணிக்கு தயா காட்டும் மியாவ்
- நான்கு மணிக்கு பிசுபிசுத்த போராட்டம் ஒரு சிறப்பு கண்ணோட்டம்
- ஐந்து மணிக்கு கனியக்கா கனியக்கா 2g நமக்கு சனியக்கா தொடர் நாடகம்
- ஆறு மணிக்கு கட்சியும் கைதும்...அழுது புலம்பும் கட்சி தலைமை.
- எழு மணிக்கு வழக்குகள் ஆயிரம்
- எட்டு மணிக்கு உழல் செய்து எப்படி தப்பித்து கொள்வது என்று விளக்குகிறார் பேராசிரியர் கலைஞர்
- ஒன்பது மணிக்கு போலிஸ் தேட நான் ஓட.
- பத்து மணிக்கு கம்பிக்குள் கனிமொழி தமிழ் திரைப்படம் வரி விலக்கு பெற்ற படம் ஆங்கில மொழி படம்
- பதினோரு மணிக்கு அமலாக்க துறையின் ஆப்பு இத்துடன் இன்றைய நிகழ்சிகள் முடிகின்றன
"ராஜா குற்றச்சாட்டுக்கு பிரதமரும், சோனியாவும் விளக்கம் அளிக்க வேண்டுமென ஜெயலலிதா தீர்மானம் நிறைவேற்றுகிறார். ஜெயலலிதா உறவுக்காக வாய்க்கு வந்தவாறு உளறிக்கொண்டிருக்கும், காங்., நண்பர்களுக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்,'' என கருணாநிதி கூறியுள்ளார்.
ஐம்பது வருடமென்ன ஆயுசு முழுதும் சம்பாதித்தாலும் சம்பாதிக்க முடியாத பணத்தை நீங்க இந்த ஐந்சே வருசத்திலேயே அதும் குடும்பமே, கூட்டு கொள்ளை,, ஊழல் செய்து சொத்து அதாவது ரெண்டு லட்சம் கோடிக்கு மேல் சம்பாதிக்க வில்லையா ? தனக்கு ரெண்டு கண்ணும் போனாலும் பரவாயில்லை உனக்கு ஒரு கண்ணாவது போகணும் என்ற உங்க நல்ல மனசு இந்த தமிழ்நாட்டு மக்கள் நன்றாக புரிந்து, தெரிந்து தானே அரசில்
தன்னுடைய உளறல் கேள்வி உளறல் பதிலில் கருணாநிதி ஜெயலலிதாவை பற்றி உளறியிருக்கிறார். விஷயம் இதுதான். "தலைவன் எவ்வழி தொண்டன் அவ்வழி" என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் கருணாநிதியின் தொண்டன் ஆ.ராசா 1 லட்சத்து 75 ஆயிரம் கோடி ஊழலில் ஈடுபட்டு திகார் சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார்.கோர்டில் அவர் பிரதமருக்கும் ப.சிதம்பரத்க்கு முன்னால் தான் எல்லாம் விவாதித்து முடிவெடுக்கப்பட்டது என்று கூறி பிரதமரையும் ப. சிதம்பரதையும் போட்டு கொடுத்து விட்டார். தன் தொண்டன் ராசா கோர்டில் உளறினாரா அல்லது உண்மையை சொன்னாரா என்று கருணாநிதி கூறவேண்டும் ராசாவின் கோர்ட் வாதத்தை எல்லா எதிர்கட்சிகளும் தொலைகாட்சிகளும் எடுத்துக்கொண்டு பிரதமரிடமிருந்து பதிலை எதிர்பார்கின்றன. பிரதமரும் ப.சிதம்பரமமும் இவர்களுடைய தலைவி திருமதி சோனியா காந்தி அவர்களும் ராசாவின் கோர்ட் வாதத்திற்கு பதில் கூற வேண்டும் என்று ஜெயலலிதா கேட்கிறார். கருணாநிதிக்கு இது உளறலாகப படுகிறது. கருணாநிதியின் மகள் கனிமொழியை காப்பற்ற வேண்டும் என்று சில்லரைக்கு மாறடிக்கும் ராம் ஜெத் மலானி கனிமொழி ஒரு பெண் என்று கோர்டில் தெரியப்படுத்தி, அவர் ஒரு அப்பாவி என்று மேலும் கூறி அவருக்கும் ஊழலுக்கும் தொடர்பு இல்லை, எல்லாவற்றிற்கும் காரணம் ஆ. ராசாதான் என்று கோர்டில் வாதாடினார். ஜெத் மலானின் வாதைதை கருணாநிதி உளறல் என்கிறாரா தேர்தலில் திமுக தோற்றதிற்கு 2G ஊழல் தான் காரணம் என்று இவர் மகன் ஸ்டாலின் கூறினார். அதுவும் உளறல் என்று கருணாநிதி கூறுகிறாரா? பலவழிகளில் வந்த பணம் பல இடங்களில், பல ரூபங்களில் இருக்கிறது. போலீசில் மாட்டிகொண்ட திருடன் எப்பொழுதும முன்னுக்கு பின் முரணாக பேசுவான் தப்பிதுகொள்ள கூட்டாளிகளையும் போட்டுக்கொடுதுவிடுவான். மஹா பெரிய ஊழலில் தன் மகளையும் மாட்டிவிட்டு தன் நம்பிக்கைக்குரிய தொண்டனையும் மாட்டிவிட்டு ஆப்பு எடுத்த குரங்கு கதையாக என்ன செய்வது என்று தெரியாமால் உளறிக்கொண்டிருக்கிறார் கருணாநிதி.





No comments:
Post a Comment