பிரதமர் பொய் பேசலாமா?
லோக்பால் விசாரணை வரம்புக்குள் பிரதமரையும் சேர்க்கலாம் என, மன்மோகன் சிங் முன்பு ஒப்புக் கொண்டிருந்தார். அவரே தற்போது அது ஏற்புடையதல்ல என தெரிவித்துள்ளார். அரசில் உள்ள நிறைய பேர் பொய் சொல்கின்றனர்.ஆனால், நல்ல மனிதரான பிரதமர் மன்மோகன் சிங்கே பொய் பேசலாமா? அவரே பொய் சொன்னால் என்ன ஆவது? லோக்பால் விசாரணை வரம்பில் பிரதமரை சேர்க்கக்கூடாது என மன்மோகன் சிங்கே கூறுவது துரதிருஷ்டவசமானது. இதுவரை நானும், மக்களும் அவரை மரியாதைக்குரியவராகத் தான் கருதி வந்தோம்.
பிரதமரையும் விசாரிக்கும் அதிகாரம் லோக்பால் அமைப்புக்கு அளிக்கப்பட வேண்டும் என, டில்லியில் நடத்தப்பட்ட மாதிரி ஓட்டெடுப்பில் 82 சதவீதம் பேர் ஓட்டளித்துள்ளனர். இந்த பரபரப்பான மாதிரி ஓட்டெடுப்பு, மத்திய அமைச்சர் கபில் சிபலின், சாந்தினி சவுக் தொகுதியில் எடுக்கப்பட்டது.
தேர்தல் கமிசன் போல தனித்துவம் வாய்ந்த அமைப்பாக சேஷன் மாதிரி உள்ளவர்களால் நிர்வகிக்க பட்டால் தான் ஊழல வேரறுக்க முடியும். முடியாதது என்பது ஜனநாயக அமைப்ல எதுவும் இல்லை. தேவை தீர்க்கமான மனிதத்துவம் வாய்ந்த தலைவர்கள் அதிகாரிகள் தேவை. அவர்களும் இந்த நாட்டில் உண்டு. ஆக புல்லுருவிகள் மொத்தமாக அளிக்க படவேண்டும். லஞ்சத்தில் கையும் களவுமாக பிடிபட்டவர்களை பணிநீக்கம் செய்து அவர் சொத்துகளை ஜப்தி செய்ய வேண்டும். லஞ்சம் வாங்கினால் நம்மை ஒளிசுருவானுக என்னும் பயம் எல்லார் மனதிலும் வரவேண்டும். அப்புறம் பார்க்கலாம் எவன் ஊழல் பண்ணுறன்னு. அப்படி பண்ணுறவனை எளிதில் தூக்கிரலாம். இந்த சிறை நிறைப்பு வக்காலத்து கூட்டம் எல்லாம் தான ஒளிஞ்சிடும். பெரும்பான்மை ஆட்கள் ஊழல் பண்ணுவதால் தான் அவர்கள் நெட் வொர்க் பலமாக உள்ளது. அதனால் divide & rule .
சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவானதே ... குப்பனுக்கும்,சுப்பனுக்கும் ஒரு சட்டம் மற்றவர்களுக்கு ஒரு சட்டம் என்பது நாம் ஜனநாயக நாட்டில் உள்ளோமா அல்லது சர்வதிகார நாட்டில் உள்ளோமா? ஊழல் என்பது பயங்கர வாதத்தை விட மோசமானது ..... உங்கள் கைகள் சுத்தம் எனில் அனைவருக்கும் பொதுவான சட்டத்தை கொண்டு வருவதில் என்ன தயக்கம்.... தங்களின் மீது நம்பிக்கை இல்லை எனில் தயவு செய்து பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வேறு தொழில் பாருங்கள் .... இந்தியாவிற்கு தேவை ஒரு நல்ல பிரதமர் ..... நல்ல தலையாட்டி பொம்மை அல்ல......
No comments:
Post a Comment