Friday, 19 August 2011

திகார் ஜெயில் வாசலில் ஹசாரேவுக்கு வரவேற்பு; ஊழல் எதிர்கோஷம் மத்தியஅரசு காதை பிளந்தது

ஜன் லோக்பால் மசோதா உருவாக்கிட வலியுறுத்தி நான்கு நாட்கள் சிறையில் இருந்து இன்று காலை (11.42மணிக்கு) வெளியே வந்த இவரை ஆயிரக்கணக்கானவர்கள் திரளாக நின்று, வாழ்க அன்னா , வாழ்க அன்னா என்றும் ஊழலுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர். ஹசாரேவுக்கு பூ மழை தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் ஆதரவாளர்கள் புடைசூழ போராட்டம் நடத்தவிருக்கும் ராம்லீலா மைதானத்திற்கு புறப்பட்டு சென்றார். தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வரும் அவர் எவ்வித களைப்புமின்றி ஆதரவாளர்களை பார்த்து இரண்டு கைகளை உயர்த்தி காட்டினார். இவர் வெளியே வந்ததும் வாசலில் காத்திருந்த பத்திரிகையாளர்கள், டி.வி., காமிரா மேன்கள் பேட்டி எடுத்தனர். இவரது ரிலீசையொட்டி ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். சிறையில் இருந்து வெளியே வந்த ஹசாரே தாங்கள் வலியுறுத்தும் லோக்பால் மசோதா நிறைவேறும் வரை ராம்லீலா மைதானத்தை விட்டு வெளியேற மாட்டேன் என்று உறுதியாக தெரிவித்தார். 


No comments:

Post a Comment