:"எந்த இடத்தில் அனுமதி கொடுத்தாலும் போராட்டம் நடத்த தயார்' என, காந்தியவாதி அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார்.ஊழலுக்கு எதிராக போராடி வரும், சமூக சேவகர் அன்னா ஹசாரே, "லோக்பால் விசாரணை வரம்பிற்குள் பிரதமரை கொண்டுவர வேண்டும்' என, கோரினார். இதை, மத்திய அரசு ஏற்காததால், வரும் 16ம்தேதி முதல் மீண்டும் உண்ணாவிரத போராட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளார். டில்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்துவதற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை.
லோக்பால் வரைவு மசோதா குழுவில், சமூக பிரதிநிதிகள் தரப்பில் இடம் பெற்றிருந்த கர்நாடக லோக் ஆயுக்தா முன்னாள் தலைவர் சந்தோஷ் ஹெக்டே குறிப்பிடுகையில், ""அன்னா ஹசாரே கடந்த ஏப்ரலில் நடத்திய போராட்டம் போல் இல்லாமல், வேறுமாதிரியாக தற்போதைய போராட்டம் அமைய வேண்டும். "மக்களால் தேர்ந்தெடுக்கப்படாதவர்கள் லோக்பால் அமைப்புக்கு, பிரதமரை விசாரிக்கும் அதிகாரம் வேண்டும் என கோருவது ஏதேச்சதிகாரமானது' என, காங்கிரஸ் தலைவர் மணிஷ் திவாரி தெரிவித்துள்ளார். ""மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மக்களுக்கு சேவை செய்யத்தான் என்பதை அவர்கள் மறந்து விட்டனர். ஜனநாயகம் என்ற வார்த்தையே அவர்களுக்கு மறந்து போய்விட்டது. எங்களை பார்த்து அவர்கள் ஏதேச்சதிகாரிகள் என, கூறுவது அதிகப்படியான வார்த்தை,'' என்றார்.
மக்களால் தேர்ந்தெடுக்க பட்டவர்கள் எதேச்சதிகாரமாய் ஊழல் பண்ணலாம் ஆனால் அதை தட்டி கேட்க மக்களுக்கு உரிமை இல்லை என கூறுபவன் அரசியல் வாதி அல்ல. அவன் பெயர் தான் ஊழல் தீவிரவாதி. லோக்பால் சட்டம் கடுமை உள்ளதாக இருக்க வேண்டும். அது தேர்தல் கமிசன் போல திறம்பட செய்யல் பட வேண்டும் இந்த எண்ணத்தில் தான் மக்கள் ஹசாரே முலம் ஒன்னு சேர்கிறார்கள் என்பதை இந்த அரசு எதேச்சதிகாரிகள் புரிந்து கொள்ள வேண்டும். ஊழல் ஒழிப்பு புரட்சி. இனி ஒரு கோஷம் உருவாகட்டும்.

No comments:
Post a Comment