Friday, 19 August 2011

காங்கிரஸ் காரர்கள் மிகவும் அமைதியானவர்கள் என்பதையே இது நிரூபிக்கிறது தங்க பாலு.

ஹசாரேவை புகழ்ந்த வெளிநாட்டு பத்திரிகைகள்

ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்தும் அன்னா ஹசாரேயைப் பற்றி, சர்வதேச அளவில் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவுக்கு, அமெரிக்க இந்தியர்களும் அமோக ஆதரவு தெரிவித்துள்ளனர்.  இந்தியர்கள், ஹசாரேவின் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். பிரபல நாளிதழ்களும், ஹசாரேவை பற்றிய கட்டுரைகளை வெளியிட்டு வருகின்றன. "தி டெலிகிராப்' பத்திரிகை வெளியிட்டுள்ள கட்டுரையில், உண்ணாவிரத போராட்டத்தின் மூலம் இந்திய அரசை, ஹசாரே கட்டிப்போட்டு விட்டதாகவும், முன்னாள் ராணுவ வீரரான இவருக்கு புகை, மாமிசம், மது, கேபிள் "டிவி' போன்ற விஷயங்கள் பிடிக்காது எனவும், தன் கிராமத்தை சேர்ந்த மூன்று பேர் மது குடித்ததற்காக கோவில் தூணில் கட்டி வைத்து ராணுவ பெல்டை கழற்றி அசாரே அடித்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.

இன்று ஊழலை எதிர்க்க எந்த அரசியல் வாதிக்கும் தகுதி இல்லை. இதற்கு காரணம், எல்லா அரசியல் தலைவர்களுமே ஏதோ ஒரு ஊழலில் ஈடு பட்டவர்கள்தாம். அன்னா ஹசாரேவை கண்டு இவர்கள் பயப்பட காரணமே அவர் ஊசலற்றவர் என்பதினால்தான். சர் வின்ஸ்டன் சர்ச்சில் ஒரு சமயம், "காந்தியிடம் எந்த அதி நவீன ஆயுதமும் இல்லை. இருப்பினும், அவரிடமுள்ள சத்தியத்தை வெல்லும் ஆயுதம் இது வரையிலும் இனிமேலும் கண்டுபிடிக்க இயலாது. எனவேதான், நான் அதற்கு தலை வணங்குகிறேன்" என்றார். அது போல சத்தியத்தை ஆயுதமாக ஏந்தி இருக்கும் ஹசாரே, முழு தகுதியும் உள்ளவர் ஆதலினால், இவரை பார்த்து இன்றைய அரசியல் வாதிகள் பயப்படுவதில் எந்த வியப்பும் இல்லை. மேலும், இவருடைய செயல் நாட்டில் விழிப்புணர்ச்சியையும், ஜாதி மதங்களை கடந்த தேசபக்தியையும் ஒற்றுமையையும் வளர்ப்பதை கண்கூடாக காண்கிறோம். இன்று ஊழலின் பால் ஒட்டு மொத்த மக்களுக்கும் இருக்கும் வெறுப்பை கன்கூடாக காண முடிகிறது.  

இந்தியா விழித்தெழுகிறது. நம்பிக்கையற்று வாடிப்போயிருந்த பாரதத்தாயின் முகத்திலே சின்ன புன்முறுவல். முதலாவதான வெளிச்சக்கீற்று. கொண்டாடுவோம். வரவிருக்கிற மழைக்காலம், விழப் போகிற மழைத்துளிகள் அன்னையை பீடித்திருந்த பீடைகளாயிருக்கிற லஞ்சம், ஊழல், அரச பயங்கர வாதம், அதிகார மமதை, சட்டத்தின் ஆட்சி என்று சொல்லிக்கொண்டு சர்வாதிகாரத்தை பேணுகிற கயமைத்தனம் முதலிய அழுக்குகளை கழுவிக் கலையட்டும். புதிய இந்தியா கம்பீரத்தோடு எழும்பி நிற்கும். புதிய தலைவர்கள் வருவார்கள். புதிய அரசியல் கலாச்சாரம் மலரும். இந்த சிறு துளிகள் ஒன்றிணைந்து பெரு வெள்ளமாய் பிரவகிக்கும். அதில் அரசியலைப் பற்றிய நமது மடமைகள் அடித்து செல்லப்படும். அரசாங்கமும், அது இயற்றுகின்ற சட்டங்களும், அதைப் பேணுவதற்க்காக ஏற்படுத்தப்பட்ட அதிகார அமைப்புகளும், நீதியை பரிபாலிக்க வேண்டிய நீதி மன்றங்களும், பேரதிகாரம் கொண்ட இன்னபிற அமைப்புகளும் மக்களுக்கானவை. மக்களுக்காக மக்களால் நடத்தப்படவேண்டியவை என்ற ஜனநாயக சத்தியம் நிலை பெறவேண்டும். தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் இந்த ஜெகத்தினை அழித்திடுவோம் என்று பகன்ற பாரதியின் கனவில் ஜீவித்த மனித நேயமே, முதல் சட்டமாக அரசாங்கத்தின் அடிப்படையாக உருப்பெறவேண்டும். நெடுங்காலத்திற்கு பிறகு ஆண் மகன் ஒருவன் பிறந்திருக்கிறான். அன்னை பூரித்து சிரிக்கிறாள், புதிய பகலவனைக் காண. கொண்டாடுங்கள் தோழர்களே! சீரிய தடம் பதிப்போம். இந்தியனிலிருந்து இந்தியம் மீள்கிறது. அன்பும், ஆன்மபலமும், அஹிம்ஸையும், அரவணைப்பும் உலகிற்கு நாங்கள் அளித்த உன்னதக் கொடை என்று உரக்க சொல்லுவோம்.


No comments:

Post a Comment