Saturday, 13 August 2011

பக்கங்களை நீக்க காழ்ப்புணர்வே காரணம் கருணாநிதி

சமச்சீர் பாடப் புத்தகங்களில் குறிப்பிட்ட சில பக்கங்களை நீக்க அ.தி.மு.க., அரசு உத்தரவிட்டதற்கு காழ்ப்புணர்வே காரணம்,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி தெரிவித்தார்.கல்வித் துறை சார்பில் அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், சமச்சீர் பாடப் புத்தகங்களில் நீக்கப்பட வேண்டிய பகுதிகளை, "ஸ்டிக்கர்' ஒட்டி மறைத்து விட்டும், சில இடங்களில் கறுப்பு நிற மார்க்கர் பேனா கொண்டு அடித்துவிட்டும் வழங்க வேண்டுமென கூறியுள்ளனர்.எல்லா வகுப்பு பாடப் புத்தகங்களிலும் இடம்பெற்றுள்ள செம்மொழி வாழ்த்தை, "ஸ்டிக்கர்' ஒட்டி மறைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

எல்லா வகுப்புப் பாடப்புத்தகங்களிலும் இடம்பெற்றுள்ள செம்மொழி வாழ்த்தை, "ஸ்டிக்கர்' ஒட்டி மறைக்க வேண்டுமாம். அந்த வாழ்த்தில், மாணவர்கள் படிக்கக் கூடாத, படித்தால் எதிர்காலம் பாழாகிடக் கூடிய வார்த்தை ஏதாவது இருக்கிறதா? ஒரே குற்றம், இந்த செம்மொழி வாழ்த்துப் பாடலை நான் எழுதியது என்பது தான்.

ஊழல் செய்வது எப்படி என்பது பற்றி திரு கருணாநிதி மன்னிக்கவும் கலைஞர் (இப்படி அழைத்தால் தானே உங்களுக்கு பிடிக்கும் ) எழுதி உலக மக்களுக்கு நன்மை செய்யலாம், அதற்கான நேரத்தை விரைவில் புதிய அரசு தரும் . மாணவர்கள் பாடங்களை படிக்க வேண்டுமா திமுக வின் அராஜகங்களை பாடமாக போட வேண்டியது தானே. கனிமொழி இன் கவிதை மாணவர்க்கு அவசியமா?

மணவர்கள் படிக்க நல்ல விஷயங்கள் உள்ளன. கவிமணியின் கவிதைகள், நாலடியார், ஒவ்வையார், ஆத்திசூடி, திருக்குறள், பாரதியார் கவிதைகள், கிருஷ்ணா பிள்ளையின் "ரத்ச்கன்யா யாத்ரிகம்", உமறுபுலவரின் கவிதைகள், தாகூரின் கவிதைகள் ஆகியவை படித்தால், மாணவர்கள் உருப்படுவர்கள். அதை விட்டுவிட்டு இவரது பிரதாபங்களினால் என்ன நன்மை. பன்னிரண்டாம் வயதில் பதுருபை திருடிக்கொண்டு கள்ள ரயில் ஏறி வந்தவராம். கள்ள ரயில் ஏறி வந்த கோமகனே, தமிழர் கலாசாரத்தில் இனைவியர்/துணைவியார்/மனைவியர்/ என்று கலங்கபடுதிய திருடர்கள் முன்னேற்ற கழக வேந்தனே, சமசீர் என்னும் வார்த்தைக்கு அர்த்தம் கொடுக்க வேண்டுமாயின் அதற்கு உனக்கு அருகதை இல்லையென்பது எனது வாதம்/ கடவுள் இல்லை என்று கூறும் போது எம்மதத்துக்கும் கடவுள் இல்லை என்று அறிவிப்பது ஆண்மையின் அடையாளம், உனக்கு இருந்ததா அந்த அடையாளம்? . இவர் தமிழில், பள்ளியில், என்ன தமிழ் இயல் இசை, நாடகம் பற்றி பள்ளியில் என்ன படித்திருப்பார்?. இசையில் தமிழ் பண்கலை பற்றி என்ன தெரியும்? எதோ தமிழில் கதை வசனம் எழுத கற்றுக்கொண்டவருக்கு முத்தமிழ் கலைஞர் என்ற பட்ட பெயர்.


2 comments:

  1. திரு. கருணாநிதி அவர்களே ! சமசீர் கல்வியில் நீக்கப்பட்ட பகுதிகள் அனைத்தும் என்ன என்று மக்களுக்கு தெரியாமல் இருந்தது. இப்போது நீங்கள் தந்த விளக்கத்தை பார்த்ததும் தான் தெரிகிறது. அது உங்கள் புகழ் பாடும் சமசீர் கல்வி புத்தகம் என்று. உன் புகழ் பாட உன் மனைவி , துணைவி, மகள், மகன், பேத்தி, கொள்ளு பேரன் , கொள்ளு பேத்தி இருக்கிறார்கள். தமிழ்நாட்டு குழந்தைகள் கல்வியில் ஏன் உன் மூக்கை நுழைக்கிறாய்! சங்கமம் பற்றி குறிப்பிடும் போது spectrum ஊழல பத்தியும் அந்த புத்தகத்தில் எழுதி இருக்கலாமே . நிலம் அபகரிப்பு பண்ணுவது எப்படி என்று அதையும் சொல்லி இருக்கலாமே . பாராட்டு விழா தனுக்கு தானே நடத்துவுது எப்படி என்பதயும் கவிதையாக ஏன் எழுதவில்லை.

    ReplyDelete
  2. தமிழின துரோகி, உன்னால் இப்போது இருக்கும் சமுதாயம் தமிழ் தவிர வேறு எந்த மொழியும் தெரியாமல் வெளியே கஷ்டப்படுகிரார்கள். இந்த நிலையில் வளரும் சமுதாயம் உன் மற்றும் உன்னுடைய பத்தினி மகளும் எழுதிய கவிதையை படித்து நாசமாக போகவா ? ஆலமரம் போன்று நீண்டு கொண்டே போகும் உன் குடும்பத்தில் தமிழ் வழி கல்வி படித்தவர் யாராவது ஒருவரை கூறு பாப்போம் ,சமசீர் கல்வியில் கோர்ட்டின் தீர்ப்பு உங்களுக்கு சாதஹம் என்று பீதிகொல்லாதீர்கள்

    ReplyDelete