Tuesday, 2 August 2011

குறுகிய லட்சியங்கள் குற்றங்களே கலாம்

""தமக்கென்று ஒரு தனித்துவத்தை வகுத்து கொண்டு இயங்குவோர் மட்டுமே வெற்றி பெறுகின்றனர்; வரலாறும் கூட அவர்களைத்தான் நினைவு கூர்கின்றது. குறுகிய லட்சியங்கள் குற்றமாகவே கருதப்படும்,'' என, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பேசினார்.


நீங்கள் குறுகிய லட்சியங்கள் குற்றங்களே என்று சொல்கிறீர்கள், ஆனால் நம் அரசியல் அரசர்கள் குறுகிய லட்சங்கள் குற்றங்களே என்று சொல்லி, லட்சம் கோடி கணக்கில் கொள்ளை அடிக்கின்றார்கள். இன்னும் ஒரு 40 வருடம் நான் வாழ்வேன் என்று வைத்துகொள்வோம். வெளிப்படையாக சொன்னால், எல்லா அரசியல் வாதிகள் [முக்கியமாக காங்கிரஸ் அரசியல், மற்றும் அதன் கூட்டாளிகள்] செய்வதை கண்டு பேசாமல் கொள்ளை அடிக்க ஒரு சான்ஸ் கிடச்சா, சும்மா நச்சுனு கொள்ளை அடிச்சிட்டு எதாவது ஒரு வெளிநாட்டில் போயி நல்ல ராயல் பிசினஸ் செஞ்சு வாழ்கையை சிறப்பாக அனுபவிக்கலாம் என்று தோணுது. மனம் வலிக்கிறது, ஒரு Flat வாங்கினால் நான் சாகும் வரை அதற்க்கு முழு சொந்தகாரன் கிடையாது, கடன் பட்டவன் தான். ஆனால், கொஞ்சம் கூட உழைத்து திங்காத அரசியல் வாதிகள், கொஞ்சம் உழைத்து முக்கள் வாசி நேரம் வாழ்கையை வீணடிக்கும் அரசு ஊழியர்கள் [no service motive], கருப்பு பண வியாபாரிகள் - முதலைகள் - இவர்கள் அனுபவிக்கும் நல்ல வாழ்கையை, உண்மையாக உழைத்து சம்பாதிக்கும் வர்க்கம் கடைசி வரை முடியவில்லை. இதற்க்கு பதில் இந்த இளைய சமுதாயம் எங்கு சென்று தேடும்?

No comments:

Post a Comment