அசோக சக்கரவர்த்தியே எவ்வளவோ ஆயிரம் படை வீரர்களை கொன்று குவித்தும், ஒரு சாதுவான பிக்குவின் போதனையால் மனம் நெகிழ்ந்து, சமாதானத்தின் பாதையையே நாடியமையை இக்கொடியவர்கள் அறிவார்களா. இப்பொழுதும் அகந்தை, ஆணவம் குறையவில்லை. போருக்குப் பின்னர், தமிழர்களுக்கு அனுப்பபட்ட நன்கொடைகளை தடுத்து, தமிழர்களின் சொத்துக்களை சூறையாடியதும் உலகம் அறிந்ததே. இதுதான் புத்த மதம் போதித்தது என பறை தட்டும் விதத்தில் தமிழர் பிரதேசங்களிலும், ஏன் கொழும்பிலும் கூட நடந்து கொண்டனர். புத்த பகவான் உயிருடன் இருந்தால் கண்ணீரில் இரத்தமும் வந்திருக்கும். தமிழரை அடிமைகளாக்கவே வைக்க விரும்பும் இவர்கள், தமது பிள்ளைகள் அழியும் பொழுது தான் ஞானம் வரும். தமிழக மக்கள் மிகுந்த அனுதாபம் காட்டியிருந்த போதிலும், இந்திய அரசுக்கு கருணாநிதியும் அவரது கும்பலும் துணை போய் இருந்ததை எவருமே மன்னிக்க மாட்டார்கள். இப்பொழுதும் தமிழர்கள் சுதந்திரமாக ஒரு ஸ்தாபனத்தை தொடங்க முடியாது. எல்லாவற்றிலும் கமிஷனை எதிர்பார்க்கிறார்கள். இல்லாவிடில் அஎதொஅ ஒரு விதத்தில் ஒரு பொய் வழக்கை ஜோடித்து ஜெயிலில் தள்ளி விடுவார்கள். ராஜபக்ஷேவின் சகோதரருமான கோத்தபய ராஜபக்ஷேவுக்கு 7 வீதம் என்று ஒரு பட்டமும் உள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக இந்திய மீனவர்களையும் இலங்கை கடற்படை இதுவரை 500 க்கும் அதிகமானோரை சுட்டுக் கொன்றுள்ளது. இந்த நிலையில் ராஜபக்ஷேவின் மகன் உட்பட வரும் இலங்கைப் பாராளுமன்றக் குழுவுக்கு இந்திய பாராளுமன்றத்தில் வரவேற்பு கொடுப்பதில் தி.மு.க.வும் காங்கிரசும் ஆட்சேபனை காட்டாமல் இருப்பது தமிழர்களின் மனதில் வருத்தத்தையே ஏற்படுத்துகிறது.
புத்தமதத்தைபின்பற்றுவதாக சொல்லி கொண்டு திரியும் இலங்கை, நடந்து முடிந்த போரில் புத்தர் எதிரே வந்திருந்தால் கூட கொன்று போட்டிருக்கும். உண்மையை ஒப்புக்கொள்ள, இலங்கை இவ்வளவு நாள் எடுத்திருக்க தேவையில்லை. பல் வேறு கட்சிகளின் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கும் தமிழக தலைவர்களால், இலங்கை தமிழனை காப்பாற்ற முடியாது. ஏனென்றால், இவர்களின் சண்டையே ஊர் சிரிக்கிறது.
அன்று வைகோ, நெடுமாறன் போன்றவர்கள் எவளவோ சொன்னார்கள் இவர்களின் தீவிர போராட்டத்தினால் ஒவொரு தமிழ் மக்களும் தங்களுக்குள்ளே உள்ள குமுறலுடன் இருந்தோமே தவிர நம்மால் எதுவும் செயமுடியவில்லை இருந்தும் முத்துக்குமார் போன்ற வாலிபர்கள் எத்தனையோ பேர் தங்கள் உயிரை மாய்த்தும் தமிழ் மக்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை அதற்கு முக்கிய காரணம் மத்திய கண்க்ரேஸ் அரசும் அபோதைய தி மு க அரசும் ஈழ தமிழர்களுக்கு உதவி புரிவது போல நடித்து மக்கள் கவனத்தை திருப்பி விட்டது தான் , செயல்படாத பிரதம மந்திரி மத்திய அரசிலும், குடும்பம் ஊழலில் குறியாக இருந்த தி மு க தலைவர் எல்லா வற்றிற்கும் மேலாக சோனியாகாந்தியின் பழிவாங்கும் எண்ணம்தான் இதனை அழிவிற்கும் காரணம் .
இலங்கையில் இறுதிக்கட்ட போர் நடந்த போது, அப்பாவி மக்களை கொத்துக் குண்டுகள் வீசி, இலங்கை ராணுவம் கொன்றது என்ற உலக நாடுகளின்
குற்றச்சாட்டை, முதன்முறையாக அந்நாட்டு அரசு ஒப்புக் கொண்டுள்ளது.பாதுகாப்பு வளையப் பகுதிகளை உருவாக்குவதன் மூலம், போர்ப் பகுதிகளில் இருந்த மக்களைப் பாதுகாக்க, இலங்கை அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. போரின் போது மக்களில் ஒருவர் கூட கொல்லப்படக் கூடாது என்பது தான், அரசின் கொள்கை முடிவு.இது பல்வேறு பயிற்சிகள் மற்றும் நடவடிக்கைகள் மூலம் இலங்கை ராணுவ வீரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால், இதுபோன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மீறி, போர்ப் பகுதிகளில் அப்பாவி மக்கள் மீதான தாக்குதலைத் தவிர்க்க முடியாமல் போய்விட்டது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகத்திலேயே கேவலமான அரசியல் வாதி கருணா தான். இலங்கை யில் தமிழ் மக்கள் மரணம் அடையும் போதும் அரசியல், இப்போது ஜெ அவர்கள் ஹிலாரி யிடம் பேசும்போதும் அரசியல். இந்த கேவலமான ஜன்மம் US உடன் பேச, முயற்சி கூட எடுக்கவில்லை. இலங்கை அரசு இப்போது உண்மையை சொல்வது போல் உண்மையாக நடித்தாலும், வரலாற்றில் ராஜ பக்ஷே வின் பெயர் இலங்கை தமிழர்களின் உதிரத்தால் எழுதப்பட்டுவிட்டது. யாருக்கு தெரியும், இலங்கை தமிழ் மக்களுக்கு நடந்த அதே நிலைமை, சிங்களவனுக்கு, சீனர்களால் வரலாம், அதை விட மோசமாக கூட இருக்கலாம்.
No comments:
Post a Comment