Saturday, 27 August 2011

ராஜிவ் கொலையாளிகள் மூவருக்கு 9ம் தேதி தூக்கு வேலூர் சிறைக்கு வந்தது உத்தரவு

வேலூர் ஆண்கள் சிறையில் தூக்கில் போடும் அறை, தூக்கில் போடும் கருவிகளை சுத்தப்படுத்தும் பணிகள் துவங்கியது. தூக்கில் போட, ஒன்பது மணிலா கயிறுகள் தயார் செய்யப்பட்டுள்ளன. தூக்கு தண்டனை நிறைவேற்ற ஒன்பது வார்டன்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு, சென்னையில் ஒரு நாள் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்காக இவர்கள் இன்று சென்னை செல்கின்றனர். மூன்று பேரின் கருணை மனுவை நிராகரித்து, ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவின் நகல், முருகன், சாந்தன், பேரறிவாளனுக்கு முறைப்படி வழங்கப்பட்டது.

தூக்கு தண்டனை உறுதிபடுத்தப்பட்ட தகவல் கிடைத்த ஏழு நாட்களுக்குள் மேல் முறையீடு செய்துவிட வேண்டும் என்று விதி உள்ளது. இதையடுத்து முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரும், நேற்று (ஆக., 26) மாலை 4 மணிக்கு, மரண தண்டனையை ரத்து செய்து தங்கள் உயிரை காப்பாற்றும்படி, தமிழக அரசுக்கு முறையீட்டு மனுக்கள் தனித்தனியாக அனுப்பி உள்ளனர். இந்த முறையீட்டு மனுக்கள், உடனடியாக பேக்ஸ் மூலம் தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டன. பிறகு பதிவுத் தபாலில் தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டன. பின், வழக்கறிஞர் தடா சந்திரசேகரன், அவரது ஜூனியார் வழக்கறிஞர் ரஜினிகாந்த் ஆகியோர் நேற்று மாலை சிறைக்கு சென்று முருகன், சாந்தன், பேரறிவாளனை சந்தித்தனர். மரண தண்டனையை ரத்து செய்யக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்வதற்கு தேவையான ஆவணங்களில் அவர்களிடம் தனித்தனியாக கையெழுத்து பெற்றனர்.

இந்த மூணு பேரை விடுங்கப்பா ராஜீவ் காந்தி கொலைக்கு பின்னால் இருக்கும் காங்கிரஸ் தலைவர்களை யாரப்பா தூக்கில் போடுவது. அன்று மீட்டிங் நடந்த பொது ஒரு காங்கிரஸ் தலைவனும் ராஜீவ் கூட இல்லை. ஒரு பெரிய தலிவன் மீட்டிங் வரும் பொது குறைந்தது பத்து லோக்கல் தலிவர்கள் கூட இருக்கணும். ஆனால் எந்த லோக்கல் தலைவனும் இறக்க வில்லை அப்படி என்றல் எல்லோருக்கும் ராஜீவ் இறப்பது தெரிந்து தானே இருக்கிறது. அதனால் தானே எல்லோரும் ராஜீவ் கொள்ளப்பட்ட நேரத்தில் அங்கே இருந்தேன் இங்கே இருந்தேன் என்று பொய் சால்ஜாப்பு சொன்னனர். முதலில் ராஜீவ் கொலைக்கு பக்க பலமாக இருக்கும் காங்கிரஸ் தலைவர்களை தூக்கில் போடுங்கப்பா அப்பா தன நாடு உருப்படும். முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை சம்பந்தமான விசாரணை முழுவதுமாக நடக்கவில்லை / முடியவில்லை என்பது எல்லோருக்கும் தெரியும். இது முறையாக நடந்திருந்தால் பல முக்கிய புள்ளிகள் கைது செய்யப்பட்டிருப்பார்கள். ஆனால் அரசியல் மற்றும் பண பலத்தினால் அவர்கள் தப்பிவிட்டார்கள் என்பது நம் அனைவருக்கும் தெரியும். முறையான விசாரணையை முதலில் நடத்துங்கள் பின்னர் இவர்களுக்கு தண்டனை கொடுக்கலாம். 20 வருட சிறை வாழ்க்கையே (இவர்கள் தவறு செய்திருந்தாலும் இதுவே) தண்டனைதானே! பின்னர் மரண தண்டனை வேறு தனியாகவா? மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் இது சம்பந்தமாக நல்ல முடிவு எடுப்பார்கள் என நம்புவோமாக!!!

நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மனிதரை நினைந்துவிட்டால். இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சி செய்யும் வரை தமிழர்கள் அவதிகளை அனுபவித்துதான் ஆகவேண்டும். ஒட்டு மொத்த தமிழ் இனத்தையும் அழிதொழிப்பது என சோனியா முடிவு செய்து அதன்படி காங்கிரஸ் ஆட்சி நடைமுறைபடுத்துகிறது. இந்திய சட்டம் ( அப்படி ஒன்று இருக்கிறதா என்ன ) கோடி திருடியவனை விட்டு விடும், கோழி திருடியவன் மேல் பாயும். ராஜீவ் காந்தி கொலை எப்படி நியாயம் இல்லையோ அதேபோல் ராஜீவ் ஈழ தமிழர்களுக்கு செய்த துரோகமும் ( indian peace keeping force). தமிழர்கள் நாம் தனிமை படுத்தபட்டிருகிறோம். சில சுயநல கருங்காலி அரசியல் தலைவர்களின் நயவஞ்சக கபட நாடகத்தினால் நாம் இழிவுபடுத்த பட்டிருகிறோம். இந்தியன் என்று சொல்லி கொள்வதில் எனக்கொன்றும் தற்போது பெருமை இல்லை. காரணம் ஊழல் மிகுந்த நாடு, ஊழலுக்கு துணைபோகும் அரசு, ஊழலின் ஊற்றுக்கண் காங்கிரஸ் ஆட்சி, சீனா ஊடுருவலை தடுக்க கையாலாகத அரசு, செயல்படாத பிரதமர், ரப்பர் ஸ்டாம்ப் ஜனாதிபதி, பிரதமரை செயல்படவிடாத அல்லிராணி, ஒன்றுக்கும் உருப்படாத பழைய பிரிட்டிஷ் சட்டம் ( இந்தியசட்டம்).... இப்படி பல .. பல இதில் என்ன பெருமை பட இருக்கிறது.

No comments:

Post a Comment