சுவாமி நிகமானந்தர் - (115 நாட்கள்): சட்டத்திற்கு புறம்பாக கங்கை ஆற்றங்கரைகளில் நடக்கும் மணல்கொள்ளையை எதிர்த்து 2011, பிப்., 19 முதல் ஜூன் 13 வரை உண்ணாவிரதம் இருந்து, உயிரிழந்தார்.
பொட்டி ஸ்ரீராமுலு - (82 நாட்கள்): 1952ல் தெலுங்கு பேசும் மக்களுக்கு தனி மாநிலம் அமைக்கக் கோரி உண்ணாவிரதமிருந்து உயிர் துறந்தார். இவரது இறப்பைத் தொடர்ந்து எழுந்த வலுவான கோரிக்கைகளால்தான் மதராஸ் மாகாணத்திலிருந்து ஆந்திரா, தனி மாநிலமாக உருவானது.
ஜதீந்திரநாத் தாஸ் - (63 நாட்கள்): இந்திய சுதந்திரத்திற்காக உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்தார். 1929, ஜூலை 13 முதல் செப்., 13 வரை லாகூர் சிறையில் உண்ணாவிரதம் இருந்தார்.
மகாத்மா காந்தி - தேச விடுதலை உட்பட பல காரணங்களுக்காக 17 முறை உண்ணாவிரதம் இருந்திருக்கிறார். அவற்றில் 1924 மற்றும் 1943 ம் ஆண்டுகளில் தலா 3 வாரங்கள் அவர் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
மேதா பட்கர் - (21 நாட்கள்): சர்தார் சரோவர் அணை விவகாரத்தில், நர்மதா பச்சாவோ அந்தோலன் இயக்கத்தின் சார்பில் 1991ம் ஆண்டு உண்ணாவிரதம் இருந்தார்.
ஹசாரேவின் 13 நாட்கள்...ஜன்லோக்பால் மசோதாவை நிறைவேற்றக்கோரி அன்னா ஹசாரே 13 நாட்கள் (சுமார் 288 மணி நேரம்) இருந்த உண்ணாவிரதம் வெற்றிகரமாக
முடிந்தது.
No comments:
Post a Comment