சாதாரண மக்களின் நலத் திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் நிதி, அரசு அதிகாரிகளின் பாக்கெட்டிற்கு செல்கிறது. மேலும், அரசு கான்ட்ராக்ட்களும் தவறான நபர்களின் கைகளுக்கு சென்று விடுகிறது. இந்த நிலைமை தொடராமல் தடுத்து நிறுத்துவேன்,'' என, பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
ஊழல் மிகப் பெரிய முட்டுக்கட்டையாக இருப்பது உண்மையே. இந்தப் பிரச்னையை, ஒரே ஒரு பெரிய நடவடிக்கை மூலம், அடியோடு தீர்த்து விட முடியாது. அதற்கான மந்திரக்கோல் எதுவும், அரசிடம் இல்லை. ஊழலை ஒழிக்க, பல வழிகளிலும் நடவடிக்கை தேவை. ஊழல் குறித்து விவாதம் நடத்த வேண்டியது அவசியம் தான். அதே வேளையில், நாட்டின் வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், அந்த விவாதம் இருக்கக்கூடாது. நாட்டின் முன்னேற்றத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் நடவடிக்கைகளில், சிலர் ஈடுபடுகின்றனர். இதை அனுமதிக்க முடியாது.சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பது போன்ற போராட்டங்களால், ஊழலை ஒழிக்க முடியாது. ஊழலை ஒழிக்க, பலமான லோக்பால் மசோதாவை கொண்டு வர, இந்த அரசு விரும்புகிறது.
உங்கள் அமைச்சரவை அந்த சட்டத்தை விரும்பவில்லை. அதற்காகத்தான் லோக்பால் மசோதா கடுமையான சட்டமாக இயக்கப்படவில்லை. இப்படி எதுவுமே இல்லாமல் , நாங்கள் எப்படி உங்களை நம்புவது? உங்கள் அமச்சரவைல் யார் என்ன செய்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியாது. மக்கள் என்ன நினைக்கின்றார்கள் என்பதும் உங்களுக்கு தெரியாத போது , மன்னிக்கவும் உங்களை பிரதமராக ஏற்க என் மனது மறுக்கிறது. இதோ நான் எழுதும் இந்த விமர்சனமும் உங்களுக்கு தெரியபோவதில்லை. இருந்தும் என் மனக்கவலையை போல் உள்ளவர்காவது தெரிந்துகொள்ளட்டும் என தான் எழுதுகிறேன்.
ஐந்து லட்சம் ஊழல்அதிகாரிகள் ரூபாய் ஐந்தாயிரம் வீதம் ஐந்து நிமிஷத்துக்கு ஒரு முறை கொள்ளை அடித்து கொண்டு இருக்கிறான்...கணக்கு பண்ணி பாருங்கள் ஒரு நாளைக்கு ...நம் தெருவில் ரோடு போடுவதில் ஊழல் செய்பவனை தட்டி கேட்க நம்மால் முடிகிறதா? தலை ஒழுங்காக இருந்தால் தானே வால் ஒழுங்காக இருக்கும் என்று நாம் நினைக்கலாம்..அரசியலில் அது தவறாகும்...மிக பெரிய சர்வாதிகார ஊழல் தலைவன் இருக்கும் நாட்டில் கூட வளர்ச்சி பணிகள் நம் நாட்டை விட நன்றாக உள்ளது..நம் நாட்டில் ஊழல் ஜனநாயகம் என்ற பெயரில் தேசிய மயமாக்க பட்டுள்ளது...
No comments:
Post a Comment