நாளைய அறிக்கை: தமிழகத்துக்கு தக்க உரிமை பெற்று தர, காவிரி நீர் அலை கடலென பிரண்டு வர, விவசாயம் பெருகிட, இலவசத்தை ஒழித்திட, டாஸ்மாக் கடைகளை நொறுக்கிட மாநிலத்தின் எல்லா மாவட்டங்களிலும் சட்டை கிழிப்பு போராட்டம் நடத்த உள்ளேன். மாவட்ட வாரியாக இந்த கொள்கைகளை முன்னிலை படுத்தி என் சட்டையை கிழித்து கொண்டு அலைவேன். தொண்டர்களும் அவ்வாறு செய்ய வேண்டும். அமெரிக்க வில் நிதி நிலைமை மோசம் அடைய திராவிட கட்சிகளே காரணம். ஜப்பானில் சுனாமி வந்த போது விஜயகாந்த் ஒன்றும் செய்யவில்லை. சென்ற வருடம் தீபாவளியின் பொது வைகோ வெடி வெடிக்கவில்லை. சென்ற வருடம் ஐரோப்பாவிலே வெள்ளம் வந்த போது அதை தமிழகத்துக்கு திருப்ப காங்கிரஸ் ஆவன செய்யவில்லை. இனிமேல் திராவிட கட்சிகளோடு கூட்டணி அமைத்தால் என்னை கழுதை மேல் ஏற்றி கரும் புள்ளி செம் புள்ளி குத்தி செருப்பால் அடியுங்கள். ஆனால் மகனுக்கு ராஜ்ய சபா பதவி மட்டும் கொடுத்து விடுங்கள்.
ஒருமாதம் நான் சொல்வதை தமிழக அரசு கேட்டால் போதும்,'' என்று கும்பகோணத்தில் நடந்த தஞ்சை வடக்கு மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசினார்.இலவசங்களை நாங்கள் எதிர்க்கிறோம்.திராவிட கட்சிகளோடு ஒட்டுமில்லை, உறவுமில்லை. இனிமேல் தமிழகத்தில் பா.ம.க., தலைமையில் தான் கூட்டணி அமையும்.தமிழக மக்கள் நலனில் கடந்த அரசுகளுக்கு அக்கறை இல்லை. ஆனால் கல்வி, பொருளாதாரம், ஆகியவற்றில் நாம் வளர்ச்சி பெறவில்லை. ஒருமாதம் நான் சொல்வதை இந்த அரசு கேட்டால் போதும்; நான் கடந்த அரசிடமும் சொன்னேன், இப்போதும் செல்கிறேன்.சமமான கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பது தான் எங்களது லட்சியம்.
No comments:
Post a Comment