Tuesday, 16 August 2011

மீன்களைப்பற்றி பேசும்போது முதலைகளைப்பற்றியும் பேசியிருக்கவேண்டும். (ஊழலை ஒழிக்க)

ஒரு அரசியல் வாதி ஐந்து வருடத்தில் ஆயிரம் கோடி அடித்தால் நமக்கு தெரிகறது...அதே சமயம் ஐயாயிரம் அதிகாரிகள் ஒரு மாநிலத்தில் அல்லது மாவட்டத்தில் ஆளுக்கு 20 லட்சம் வைத்து ஒரு வருடத்துக்கு கொள்ளை அடித்தால் அதுவே அரசியல் தலைவன் அடிக்கும் கொள்ளையை விட ஐந்து மடங்கு பெரிது..இப்படி லட்ஷகனக்கான அதிகாரிகளும், அரசியல்வாதிகளின் பினாமி அல்லது பணக்கார கான்றேக்டர்களும் அடிக்கும் கொள்ளைகள் தான் நம் நாட்டை இப்படி ஒரு நிலைக்கு கொண்டு போயி உள்ளது...நம் பிரதமர் கூறியுள்ள இந்த கூற்று மிக மிக அசாதாரணமானது.....ஊழல் அதிகாரிகளின் மீது கைவைத்தால் ஒரு ஆட்சியையே கவிழ்த்தும் திறன் படைத்தவர்கள் அவர்கள்..அவர்களால் முடியாதது ஒன்றுமில்லை...நமக்கு ஒரு திட்டம் வந்து சேர வேண்டுமென்றால் அரசியல்வாதி அடிக்கும் கொள்ளை 20சதம் என்றால் அனைத்து அதிகாரிகளும்/கான்றேக்டர்களும் அடிக்கும் கொள்ளைகள் 80 சதம் ...அரசியல் வாதிகள் லம்பாக ஒரு தொகை அடிக்க மீதி உள்ள 80 % தொகையை நம் கண்ணுக்கு தெரியாத கூட்டம் பங்கு போட்டு கொள்கிறது...நமக்கு அரசியல் வாதிகள் பண்ணும் தப்பு மட்டும் கண்ணுக்கு தெரிய நாமும் , இந்த கட்சி போயி அந்த கட்சி என மாத்தி மாத்தி ஓட்டு போட்டு நம்மை நாமே ஏமாற்றி கொள்கிறோம்....இதையெல்லாம் கட்டுபடுத்த ஒரு நல்ல தலைவன் தேவை,,அவனுக்கு என்று குடும்பம் இருக்க கூடாது/கொஞ்சம் நல்ல மனதுள்ள சர்வாதிகாரியாக தான் இருக்க வேண்டும்/அனைவரையும் கட்டு படுத்தும் திறன் சாதாரண விஷயமல்ல.

நம் அரசுகளோ கையாலாகாத அரசுகள் ...பவர் இல்லாத தலைவர்கள்..கூட்டணி கட்சிகளின் நிர்பந்தங்கள்.....ஜாதி கட்சிகளின் தலையீடுகள்..ஊழலை ஒழிக்க அரசியல்வாதிகள் மட்டும் திருந்தினால் போதாது..நம் மக்களும் திருந்த வேண்டும்.

கனிமொழி ராஜா ரெண்டு பேரும் இவ்ளோ பெரிய ஊழல் செஞ்சது உங்க யாருக்குமே தெரியாமலா நடந்திச்சி. சொந்தமா முடிவெடுத்து செயல்படுத்த தெரியாதவர். அடிமையா இருக்கறதுல உங்களுக்கு என்ன அவ்ளோ சந்தோசம். உங்கள நம்பி ஏமாந்து போய்டோம். உங்களுடைய சாதனைகள் ரெண்டு தான். அதுவும் தமிழனை குறிவச்சி நடத்திருக்கிங்க. உலக அளவுல ஊழல்ல முதலிடம் தமிழ்நாடுன்னு இந்திய தமிழனுக்கு ஒரு கேவலத்தை தேடி தந்திருக்கிங்க. இலங்கை தமிழனுக்கு முடிந்த அளவுக்கு அழிவை தேடி தந்திருக்கிங்க. இந்த இரண்டும் கோடிக்கணக்கான மக்களின் மனதில் உங்களை நிலைநிறுத்தும். தமிழனுக்கு நீங்கள் செய்த பாவத்திற்கு ஆண்டவன் உங்களுக்கு சரியான தண்டனையை விரைவில் தர வேண்டிக்கொள்கிறேன்.

No comments:

Post a Comment