உண்ணாவிரதம் துவக்கவிருந்த காந்தியவாதியான அன்னா ஹசாரே இன்று காலையில் அவரது வீட்டில் இருந்து போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். இவரை கைது செய்யவில்லை அப்புறப்படுத்தியிருக்கிறோம் என்று சொன்னாலும், ஜனநாயக ரீதியிலான போராட்டத்திற்கு உரிமை மறுக்கும் மத்திய அரசுக்கு எதிர்கட்சிகள் மற்றும் ஹசாரே ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அன்னா ஹசா÷õர கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து அமெரிக்க பல்கலை., மாணவர்கள் கல்லூரியை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்திய தூதரகம் முன்பாக திரண்ட மாணவர்கள் ஹசாரேவுக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பினர். ஊழலை தடுப்பதில் மத்திய அரசு தோல்வி அடைந்து விட்டதாலும், போராடுவதற்கான அடிப்படை உரிமை மறுக்கப்பட்டிருப்பதாலும் நியாயமான அரசு நடக்கிறதா என்று சந்தேகம் எழுந்திருப்பதாக எழுதிய மனு ஒன்றையும் மாணவர்கள் தூதரக அதிகாரிகளிடம் கொடுத்தனர்.
"மன்னன் எவ்வழி , மக்கள் அவ்வழி" , மூன்று நாட்களுக்கு முன்பு பெங்களூரு நீதியரசர் எடுத்துரைத்த ' BE YOU EVER SO HIGH , THE LAW IS ABOVE YOU ' என்பதின் பொருள் உணர்ந்து , சட்டத்தை மதிக்கும் , கட்டுப்படும் தலைவர்களே நமது நாட்டை நல்லரசாக்க முடியும். அன்னா ஹசாரேக்களும் , அவர் வற்புறுத்தும் புதிய சட்டங்களும் அவசியமில்லை. You can take the horse to the water, but only it has to drink. சட்டங்களுக்கு கட்டுப்படும் மனம் இல்லாத பொழுது , இருக்கிற சட்டங்கள் பலவீனமானவை என்பதைவிட ,முறையாக பயன்படுத்த அனுமதிக்கப்படவில்லை என்பதே உண்மை. இருப்பதை பயன்படுத்த போராட்டம் நடத்தாமல் , பறப்பதை பிடிக்க போராடுவது , குறட்டை விட்டு தூங்கிக்கொண்டுள்ள காவலாளிக்கு இருக்கும் கத்தியுடன் , துப்பாக்கியும் கொடுக்க வேண்டும் என்கிற போராட்டங்கள் , யோசிக்க வைக்கின்றனவே ! காவலுக்கு வைத்துள்ள நாயை தூங்குவதற்கு அனுமதித்துவிட்டு, இது போதாது என புலியை வரவழைப்பதா?
இதே அமெரிக்காவும் ஒரு ஜனநாயக நாடுதான். அங்கு அமெரிக்க அதிபராக இருந்த பில் கிளிண்டன் மீதே ஒரு பெண் தன்னுடன் உறவு கொண்டார் என்று குற்றம் கூறிய பொழுது , சர்வ வல்லமை பொருந்த்ய அமெரிக்காவை ஆட்சி செய்த அதிபர் தன் மக்கள் முன் மன்னிப்பு கேட்டார். ஏனெனில் அமெரிக்க மக்கள் தாங்கள் வேண்டுமெனில் இஷ்டம் போல் வாழ்வார்கள் ஆனால் தன் நாடு என்று வந்து விட்டால் தம்மை ஆட்சி செய்பவரின் ஒழுக்கத்தையும் நடத்தையும் நன்கு பரிசோதித்த பின்னரே தேர்ந்தெடுப்பர்.ஆனால் நம் நாட்டிலோ சாதாரண கவுன்சிலர் மீது ஒரு பெண் தைர்யமாக புகார் கொடுக்க முடியுமா ? கொடுத்தால் அப்பென்ன்ன் நிலை என்னாகும் ! இப்படிப்பட்ட நாட்டை ஆளுவோரின் லட்சணமும் இதில் இருந்தே தெரியும். வாழ்க தமிழ் ,வளர்க தமிழ் இனம் .
No comments:
Post a Comment