காந்தி அடிகள் அன்றே சொன்னார்,அதுவும் சுதந்திரம் அடைந்த அன்று,அவர் பணதடிமை ஆகி ஊழல் பெருகிவிடும்,அரசியல்வாதிகள் நேர்மையோடும் மக்களின் வறுமையை போக்குவதில் கவனமாக இருக்கவேண்டும் ,என்று மக்களுக்கு பொருளாதார சுதந்திரம் கிடைக்கிறதோ அன்றுதான் உண்மையான சுதந்திரம் கிடைக்கும் என்று.அறுபத்து நான்கு ஆண்டுகளாகியும் நடந்திருப்பது ஊழல் பற்றி அவர் சொல்லியதுதான்.காங்கிரசை கலைக்க வேண்டும் என்றும் சொன்னார்.காங்கிரஸ் தானே சின்னாபின்ன மாகி விட்டது.இன்று உள்ளது இந்திரா காங்கிரஸ்தான்.இந்திரா பெரோஸ் காந்திதான் இந்தியாவில் ஊழலை ஊக்குவித்தார்,நாகர்வாலா ஊழல் மூலமாக.அண்ணாவை விமரிசிக்க மானிஸ் டேவாரி ஒன்றும் தியாகி அல்ல.
ஊழல் ஒழிப்பு என்பது எல்லா இந்தியர்க்கும் நல்லது! மோடி ஒழிப்பை அவரது மாநிலத்தாரே ஒப்புக் கொள்ளமாட்டார்கள். அவர் மக்களால் மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மக்கள் சேவகர்! உங்கள் இஷ்டத்துகெல்லாம் போராட அவர் என்ன பாலைவன நாட்டுக் கைக்கூலியா?
அன்றைக்கு ஜெயப்ரகாஷ் நாராயண் அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கை போன்றல்ல இன்றைக்கு அன்னா ஹசாரே நடத்தும் தர்ம யுத்தம்..!! ஆனால் இவர்கள் இருவரின் நோக்கமும் ஒன்றுதான்..!! ஊழலில் கறைபடிந்த இந்த காங்கிரஸ் ஆட்சி கலைக்கப்பட்டே ஆகவேண்டும்..ஏற்கனவே சொன்னது போன்றே நடக்கின்றது..அன்னா ஹாசாரே மீதான "சேற்றை" வாரி இறைக்கும் போக்கை மேற்கொள்வார்கள் என்றேன்..இயலாதவர்கள் இதற்கும் கீழ் தரம் குறைந்தும் பேசுவார்கள்..!! லோக்பாளில் அன்னா ஹசாரே சேர்க்க சொன்ன சரத்துகள் ஏற்புடையனவே அன்றி தவறில்லையே..எதற்க்காக இவர்கள் பயம் கொள்ளவேண்டும்..? கபில் சிபல் போன்ற மேல்தட்டு ஆடை அணியும் பெரும் புள்ளிகளுக்கு ஏழைகளின் துயர் பற்றி என்ன தெரியும்.? ஒரு நாளைக்கு ஓர் லட்ச ரூபாய் வாடகையாய் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் அறை எடுத்து பதவி சுகம் கண்ட கட்சியினர் அல்லவா இந்த காங்கிரசார்..!! அன்னா ஹசாரின் இந்த போராட்டம் வெல்லும் நாட்டிலே ஓர் மாற்றத்தை கொண்டுவரும்..! ஆயிரம் போலீசாரை கொண்டு இந்த அறப்போராட்டத்தை நசுக்க நினைத்தால் நாட்டிலே அமைதி அழியும்..! ஒற்றுமை குறையும்..காங்கிரஸ் இத்தோடு மறையும்..! இறுதியில் அஹிம்சையே வெல்லும்..அன்னா ஹசாரே என்கிற அஹிமசாவாதியால்..!!
காங்கிரஸ் தன்னை காப்பாற்றி கொள்ளவே அண்ணா ஹசாரே மீது இப்படி ஒரு குற்றச்சாட்டு கூறியுள்ளது. இது மக்களை ஏமாற்றும் செயல். உலகெல்லாம் உண்ணாவிரதத்தையும் சத்தியாகிரகத்தையும் உன்னதத் தீர்வாகப் பார்க்கும் வேளையில் இந்தியாவில் மட்டும்தான் உண்ணாவிரதத்துக்கும், சத்தியாகிரகப் போராட்டத்துக்கும் அரசால் மறுப்புத் தெரிவிக்கப்படுகிறது. அறவழிப் போராட்டம் அடக்குமுறையால் தடுக்கப்படுகிறது. போராட்டக்காரர்கள் அகற்றப்படுகிறார்கள். நியாயம் கேட்க அண்ணல் காந்தியின் அறவழியில் உண்ணாவிரதம் இருப்பவர்கள் முடக்கப்படுகிறார்கள்.குற்றச்சாட்டைநிரூபியுங்கள்':"என் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளை, காங்கிரஸ் கட்சியினர் நிரூபிக்க வேண்டும். இல்லையெனில், ஜன்லோக்பால் மசோதாவை நிறைவேற்றினாலும், உண்ணாவிரதப் போராட்டத்தை வாபஸ் பெற மாட்டேன்' என, ஹசாரே கூறியுள்ளார். இதற்கு மனிஷ் திவாரி பதில் என்ன .காங்கிரஸ் ஒன்றாம் வகுப்பு பிள்ளை போல் நடந்து கொள்வது ஏன்.. ஊழல் கறைபடிந்த இந்த காங்கிரஸ் ஆட்சி கலைக்கப்பட்டே ஆகவேண்டும்.
"ஹசாரே தான் நடத்தும் அறக்கட்டளை ஒன்றிலிருந்து, தன் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக 2.2 லட்சம் ரூபாய் செலவழித்துள்ளார். இது சட்ட விரோதமானது; ஊழலுக்கு சமமானது. மேலும், ஹசாரே நடத்தும் அமைப்புகளில் ஒன்று, 20 ஆண்டுகளுக்கு கணக்கு சமர்ப்பிக்கவில்லை.
லோக்பால் மசோதாவுக்காக நடத்தும் போராட்டம் அல்ல. அவரை காப்பாற்ற நடத்தும் போராட்டம். சாவந்த் கமிஷன் தெரிவித்துள்ள மோசமான குற்றச்சாட்டுகளுக்கு முதலில் ஹசாரே பதில் அளிக்க வேண்டும். இதைத் தான் நாடு விரும்புகிறது.போராட்டம் என்ற பெயரில், நாட்டில் நிலையற்ற தன்மை ஏற்படுத்த ஹசாரே முற்படுகிறார். இப்படி ஒரு சீர்குலைவு நடவடிக்கையில் ஒருவர் ஈடுபடும் போது, அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டியது எந்த ஒரு அரசியல் கட்சியின் கடமையாகும். ஹசாரே விவகாரத்தில், இதுவரை மத்திய அரசு மிகவும் பொறுமை காத்து வருகிறது. பார்லிமென்டை அவமதிக்கும் வகையில் செயல்படும், ஹசாரேக்கு எதிராக மற்ற அரசியல் கட்சிகளும் குரல் கொடுக்க வேண்டும்.இவ்வாறு மணீஷ் திவாரி கூறினார்.
அன்னா ஹசாரே கூறியதாவது, எனக்கு சொந்தமான அறக்கட்டளைகளில் ஊழல் நடந்துள்ளதாக, காங்கிரஸ் கட்சியினர் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக, அவர்கள் போலீசில் புகார் செய்யட்டும்; விசாரணை நடத்தட்டும். என் மீதான குற்றச்சாட்டுகளை அவர்கள் நிரூபிக்க வேண்டும். இல்லையெனில், நாளை முதல் மேற்கொள்ளவுள்ள உண்ணாவிரதப் போராட்டத்தை, வாபஸ் பெற மாட்டேன்.இவ்வாறு ஹசாரே கூறினார்.
No comments:
Post a Comment