Friday, 26 August 2011

ஊழலுக்கு துணை போனதில்லை பிரதமர்

""நான் தவறு செய்திருக்கலாம். ஆனால், ஊழலுக்கு ஒருபோதும் துணை போனது இல்லை. ஊழல் மூலம் நான் சொத்து குவித்துள்ளதாக, எதிர்க்கட்சிகள் கருதினால், என் சொத்துக்களை அவர்கள் ஆய்வு செய்யலாம்,'' என, பிரதமர் மன்மோகன் சிங், லோக்சபாவில் நேற்று பேசினார். 

பிரதமர் மன்மோகன் சிங் அவர்களே "ஊழலுக்கு ஒருபோதும் துணை போனது இல்லை. ஊழல் மூலம் நான் சொத்து குவித்துள்ளதாக, எதிர்க்கட்சிகள் கருதினால், என் சொத்துக்களை அவர்கள் ஆய்வு செய்யலாம்" என்று கூறி நீங்கள் உங்கள் பலவீனத்தை மறைக்காதீர்கள். உங்கள் பலவீனமே இந்த பிரதம மந்திரி பதவி ஆசைதான். இந்த பதவி மோகம் தான் உங்கள் பெயரை கெடுத்தது. ந்திய அரசியலில் ஓநாய்கள்தான் அதிகம். பசு போன்ற உங்கள் முகமூடியை அணிந்து ஓநாய் கூட்டங்கள் வளம் வருகின்றன என்பது உங்களுக்கு தெரியாததல்ல. நீங்களும் மனித பிறவி தானே; குருதுவாரா செல்பவர் தானே. அப்படி இருக்கும் போது ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழ் மக்களை எந்தவித கோட்பாடுகளுக்கும் கட்டுபடாமல் கொன்று தீர்த்தது ஏன் ? உங்கள் இனம் ஒரு 4000 சீக்கியர்களை 1984 இல் கொன்றதற்கு உங்கள் சமூகமே இன்றளவும் கூப்பாடு போட்டு கொண்டிருக்கிறது. ஆனால் ஏன் நீங்கள் மற்றொரு இனம் அழியும் போது வேடிக்கை பார்த்து கொண்டிருந்தீர்கள் ? சுதந்திரம் அடைந்ததிலிருந்து உங்கள் ஆட்சியில் தான் அலை அலையாக ஊழல் பெருக்கெடுத்து ஓடுகின்றது. அதை தடுக்க நீங்கள் ஏதாவது முயற்சி எடுத்தீர்களா? சாக்கு போக்கு சொல்லும் நீங்கள் என்ன பள்ளி படிக்கும் குழந்தையா? நான் ஊழல் செய்யவில்லை என்று நீங்கள் தப்பிப்பது உங்களுக்கு வெட்கமாய் இல்லையா ? நீங்கள் ஒரு காவலர். கை கட்டி வேடிக்கை பார்க்கலாமா? இந்த லோக்பால் மசோதா நீர்த்து போக உங்கள் கட்சிகாரர்களும் மற்ற கட்சிகளும் எல்லாவித தந்திரங்களையும் உபயோகிக்கிறார்கள். நீங்களும் அதற்கு துணை போவது ஏன்? மனது இலகுவாய் இருக்க வேண்டும். அப்போதுதான் நாம் காற்றில் பறந்து வாழ்க்கையை அனுபவிக்கலாம். தற்போது நீங்கள் பலவித ஊழல்களுக்கும் முறை கேடுகளுக்கும் பல வழிகளில் காரணமாகி நொந்து நூலாகி கொண்டிருக்கிறீர்கள். அதற்கு காரணம் ஆசை. பிரதமர் பதவியை உங்களால் உங்கள் எண்ணத்திற்கு ஏற்ப வழிப்படுத்த முடியாவிட்டால், அந்த மேல்துண்டை விட்டொழியுங்கள். நிம்மதியாக இருங்கள்.

நாட்டின் பிரதமந்திரி நாட்டைபற்றி யோசிக்காமல் தன்னுடைய கட்சியின் கோட்பாடுகள் ஏற்று செயல்படும் ஒரு சாதாரண குடிமகன பேசுவது ஜனநாயக இந்தியாவில் மட்டுமே நடக்கும். படித்த முட்டாள்களுக்கு இதைவிட வேறென்ன உதாரணம் வேண்டும். உட்கட்சி அரசியலினால் ஒரு பிரதம மந்திரியின் பதவி படும் பாட்டை தானே முன்வந்து தன நட்டு மக்களிடம் சொல்கிறார். கண்டிப்பாக இந்தியாவில் ஜனநாயக புரட்சி நடந்தலோழிய இந்திய மக்களை இந்த பாதாளத்தில் இருந்து யாராலும் காப்பாற்ற முடியாது எனபது திண்ணம்.உங்கள் மந்திரிகளின் தலைவன் நீங்கள். அவர்களை கட்டுக்கோப்புடன் வேலை செய்ய வைப்பதுதான் உங்கள் வேலை...அதை விட்டு விட்டு தவறு செய்வது மனித இயல்பு; தவறு செய்து விட்டேன் என சிறுபிள்ளை தனமான பேச்சு மரியாதைகுரியதாய் இல்லை...நீங்கள் இந்தியாவின் பிரதமர் என்பதை மறந்துவிட்டு பேசுகிறீர் மேலும் தவறு செய்யாமல் ஜன லோக்பாலை அமல்படுத்துங்கள்...உங்கள் மத்திய அமைச்சரவையில் உள்ள அழகிரியை நீக்குங்கள்...மொத்தம் செய்யாத தவறுகளில் பிரார்சித்தம் செய்ய இரண்டு வாய்ப்பு உங்களுக்கு...

No comments:

Post a Comment