Saturday, 13 August 2011

அமெரிக்க அதிகாரி கருத்தினால் சர்ச்சை அஹிம்சை போராட்டத்திற்கு அமெரிக்கா எப்போதும் ஆதரவு தெரிவிக்கும் (Lokpal)

அமெரிக்க வெள்ளை மாளிகை செய்திதொடர்பாளர் விக்டோரியா என்பவர் அளித்துள்ள பேட்டியில் ; ஜனநாயக ரீதியிலான போராட்டத்தை இந்திய அரசு நசுக்க கூடாது என்றும் , அஹிம்சை போராட்டத்திற்கு அமெரிக்கா எப்போதும் ஆதரவு தெரிவிக்கும் என்றும் கூறினார். இவரது கருத்து காங்கிரசுக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. இந்திய நாட்டில் உள்ள விஷயம் குறித்து அறிந்து கொள்ளாமல் அமெரிக்கா தெரிவித்துள்ள கருத்து முறையானதல்ல என்றும் இது மிக்க கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் காங்., செய்தி தொடர்பாளர் அபிஷேக்சிங்வி கூறியுள்ளார். பா.ஜ.,வும் கண்டனம் தெரிவித்துள்ளது.

அகிம்சையை பற்றி இந்தியாவுக்கு அமெரிக்கா சொல்லி தர வேண்டியதில்லை. அகிம்சையின் பிறப்பிடமே இந்தியா என்பது இந்தாள் அமெரிக்கர்களுக்கு தெரியாது. அவர்களுக்கு தெரிந்த அகிம்சையை, தீவிரவாதிகளை ஆதரிக்கும் அமரிக்காவின் செல்ல பிள்ளையான பாகிஸ்தானுக்கு சொல்லி கொடுத்தால் நல்லது. இந்த விசயத்தில் பாரதிய ஜனதாவும் அமெரிக்காவை கண்டனம் செய்துள்ளது இந்தியா அரசியல் நாகரீகம் மேம்பட்டு வருவதை காட்டுகிறது.

திரு.அன்னா ஹசாரே போன்றவர்களின் போராட்டத்தினால் இந்தியாவை பற்றிய தவறான எண்ணம் உலக நாடுகளில் ஏற்பட வழிவகுத்து விட்டது என்பது அமெரிக்காவின் இந்த அறிக்கையில் இருந்து தெரிகிறது. இதே நிலை நீடித்தால் இந்தியா ஒரு இழிவான நாடு ( இந்தியாவில் உள்ள அனைவருமே ஊழல் மிக்க, ஒழுக்க மற்ற சுரண்டல் பேர்வழிகளால் நிறைந்த நாடு ) என்று உலக நாடுகள் மிக விரைவில் முடிவுக்கு வந்து விடும். தேசம் தழுவிய இந்த நடவடிக்கையில் கொஞ்சம் நிதானமும், அரசியல் முதிர்ச்சியும், விவேகமும் அவசியம். திரு.ஜெயபிரகாஷ் நாராயணன் போன்ற தலைவர்கள் தேவை. முதலில் மக்களிடம் அரசியல் விழிப்புணர்வு தேவை. அது 1977 -இல் இருந்தது ஆனால் தலைவர்களிடையே உருவான ஈகோ வால் கொஞ்ச காலத்தில் நீர்த்து போய் விட்டது. ஆக்ரோசமான போராட்டத்தை விட்டு விட்டு, ஆக்கபூர்வமான அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு இயக்கத்தை உருவாக்கி இன்றைய இளைஞர்களை அதிகமாக ஈடுபாடு கொள்ள செய்ய வேண்டும். உடனடியாக இல்லா விட்டாலும் நீண்ட நாட்களாக அதன் பலன் இருக்கும்.

1 comment:

  1. அகிம்சையை பற்றி இந்தியாவுக்கு அமெரிக்கா சொல்லி தர வேண்டியதில்லை. அகிம்சையின் பிறப்பிடமே இந்தியா என்பது இந்தாள் அமெரிக்கர்களுக்கு தெரியாது. அவர்களுக்கு தெரிந்த அகிம்சையை, தீவிரவாதிகளை ஆதரிக்கும் அமரிக்காவின் செல்ல பிள்ளையான பாகிஸ்தானுக்கு சொல்லி கொடுத்தால் நல்லது. இந்த விசயத்தில் பாரதிய ஜனதாவும் அமெரிக்காவை கண்டனம் செய்துள்ளது இந்தியா அரசியல் நாகரீகம் மேம்பட்டு வருவதை காட்டுகிறது.

    ReplyDelete