இலங்கை அதிபர் ராஜபக்ஷவுக்கு எதிராக நடிகர் விஜய் கையெழுத்து போட மறுத்த செய்திதான் கோடம்பாக்கத்தில் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. ஒருபுறம் அவர் ஏன் கையெழுத்து போட மறுத்தார்? என்று பட்டிமன்றம் நடத்தாத குறையாக விவாதம் நடந்து கொண்டிருக்கிறது.
இன்னொருபுறம்... விஜய்க்கு ஏற்பட்டிருக்கும் இந்த கலங்கத்தை துடைக்க அவரது தந்தை டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர் ஒரு மாஸ்டர் ப்ளான் போட்டுக் கொண்டிருக்கிறாராம்.
விடுதலை சிறுத்தைகள் சார்பில் ராஜபக்ஷவை இனப்படுகொலை குற்றவாளி என அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நடத்தப்பட்டு வரும் கையெழுத்து வேட்டையின்போதுதான், விஜய் கையெழுத்து போட மறுத்திருக்கிறார்.
நண்பன் பட சூட்டிங்கில் இருந்தபோது விஜய்யை சந்தித்த வி.சி. நிர்வாகிகள் கையெழுத்து கேட்டிருக்கிறார்கள். என்ன, ஏது என்று விசாரித்த விஜய், கையெழுத்து போட மறுத்து விட்டாராம். விஜய் மறுத்ததற்கு காரணம், அவரது விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அப்படியயொரு கையெழுத்து இயக்கம் நடத்த திட்டமிட்டிருந்ததுதான் என்று புதிய தகவல்களை பரப்பி வருகிறார்கள் ஏஸ்.ஏ.சி அண்ட் கோவினர்.
முன்பொருமுறை இதேபோன்றதொரு கையெழுத்து வேட்டையின் போதுதான் மிரண்டு ஓட்டம் பிடித்தார் நடிகர் ஜீவா. இப்போது விஜய் சிக்கிக் கொண்டார். நன்றி தினமலர், புகைப்படங்கள் நக்கீரன்.
எப்படியெல்லாம் நடந்துக்கறாங்க?
Liinke taken from: http://sakthistudycentre.blogspot.com/2011/07/blog-post_6419.html.
Thank




No comments:
Post a Comment