Sunday, 1 May 2011

அச்சமில்லை அச்சமில்லை உச்சி மீது வீழுகின்ற போதிலும் என்று பாரதியார் - DMK தலைவர் கடைபிடிக்கிறார்

திமுகாவின் வளர்ச்சியை பொறுத்து கொள்ளமுடியாமல், தமிழகத்தில் அரியணை ஏறவேண்டும் என்ற லட்சியத்தில் இதை செய்கிறார்கள். தொண்டர்கள் இல்லாமல், காங்கிரஸ் தமிழத்தில் அரியணை ஏறமுடியாது. வேண்டுமென்றே தலைவரின் குடும்பத்திற்கு தொந்தரவு குடுத்து, கட்சியை குலைக்க பார்கிறார்கள். இதற்கெல்லாம் தலைவர் பயப்படமாட்டார். அச்சமில்லை அச்சமில்லை உச்சி மீது வீழுகின்ற போதிலும் என்று பாரதியார் சொன்ன வார்த்தைகளை தலைவர் கடைபிடிக்கிறார். உயிரே போய்விடும் என்ற நிலையில் மிசாவில் ஜெயிலில் அடைக்கப்பட்டார். தண்டவாளத்தில் தலை வைத்து படுத்த அஞ்சா நெஞ்சன். கூடிய விரைவில் இதற்கெல்லாம் ஒரு முடிவு வரும். மீண்டும் ராஜா வெளிவருவார். தமிழத்தின் நிதி அமைச்சராக பொருபெர்ப்பார். மத்தியில் தமிழனுக்கு பத்து காபினெட் மினிஸ்டர் கிடைக்கும். திமுக எழுந்து நிற்கும்.

மஞ்ச துண்டார் பாணியிலே சொல்வதானால்..:சட்டம் தன் கடமையை செய்யப்போகின்றது.

"யானைக்கும்: அடி சறுக்கும் என்பதுபோலவோ..அல்லது பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்பது மாதிரியோ எழுபதாண்டுகளில் செய்த ஊழல்களில் தப்பித்து விஞ்ஞான ஊழல் பேர்வழி என்று சர்காரியாவால் விமர்சிக்கப்பட்டு..............

2006 ஆம் ஆண்டு இலங்கை ராணுவம் புலிகளின் மீது போர் தொடங்கியபோது ஈழ தமிழர்களை காட்டி தி மு க மத்திய அரசில் வெளியேறி இருந்தால் மத்திய அரசு கவிழ்ந்து இருக்கும். இவர்களும் ஊழல் புரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆசை யாரை விட்டது என்பதுபோய் பேராசை யாரை விட்டது என்று கேட்கும் அளவுக்கு கொள்ளையோ கொள்ளை. உலகத்திலேயே மிக பெரிய ஆயுதம் ஏதிலிகளின் கண்ணீர். இலங்கை இனப்படுகொலைக்குத் துணை போய் விட்டு இப்போது ஐ. நா அறிக்கை வந்ததும் கூசாமல் போர்க் குற்றவாளி என்று அறிக்கை விடுகிறார்..

இந்த ஊழல் பணம் எப்படி எல்லாம் இந்திய மக்களையும் ஜனநாயகத்தையும் சாகடித்திருக்கிறது என்று எண்ணி இருந்தால் கண்டிப்பாக ஆத்திரம் கனலாக வெளிவந்திருக்காது. இந்த 70 ஆண்டுகால அரசியல் வித்தகரிடம் மேலோங்கி இருப்பது நாட்டு பற்றும், மக்கள் பற்றும் கிடையாது. பற்று என்றால் அது தீராத பணப்பசி, அகோர அதிகார வெறி, எதையும், எல்லாவற்றையும் கொண்டு வந்து தன் பிள்ளைகள், பெண்ஜாதிகள், பேரன், பேத்திகள் வசம் ஒப்படைக்கும் ஒரு குடும்ப சுயநலம் ஆகியவை தான். இப்படிப்பட்டவரிடம் ஒரு 25 % தமிழர்கள் அடிமை பட்டு, சிந்திக்கும் திறமை அற்றவர்களாக, ஒபியம் சாப்பிட்ட மனிதர்கள் மாதிரி கிடப்பது தான் மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. தன் குடும்பம் சிக்கலில் இருக்கிறது என்றால் கட்சி, தமிழ், தமிழன், பூணூல், ஆரியன், திராவிடன், தலித், மிகவும் பிற்ப்படுத்தபட்டவன் என்று தில்லு முள்ளு பேசி மக்களை திசை திருப்பி ஏமாற்றி வாழ்ந்து கொண்டிருக்கிறார் இந்த பெரியவர்.

No comments:

Post a Comment