Sunday, 29 May 2011

கனிமொழிக்கு ஜாமின் கிடைக்குமா : கடல்லயே இல்லையாம்!!!!...


கூட்டுச்சதியாளர் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ராஜ்ய சபா எம்.பி., கனிமொழி கடந்த 20ம் தேதியன்று கைது செய்யப்பட்டார். டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அவரது ஜாமின் மனு சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டால் நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் டில்லி ஐகோர்ட்டில் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்ததார். ஜாமின் மனு மீதான விசாரணை 30ம் தேதி 
( இன்றைக்கு) ஒத்திவைக்கப்பட்டது. இன்று இந்த ஜாமின் மனு விசாரணைக்கு வருகிறது. அண்மையில் டில்லி சென்ற தி.மு.க., தலைவர் கருணாநிதியிடம் காங்கிரஸ் மேலிடம் கனிமொழி விஷயத்தில் சட்டத்தை மீறி எதுவும் செய்ய முடியாது என கைவிரித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கனிமொழிக்கு இன்று ஜாமின் கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

No comments:

Post a Comment