வீட்டு வேலைக்கார பெண்மணி "உயர் போலீஸ்" அதிகாரியை அடித்த சம்பவம் அராஜகத்தின் ஆரம்பம். மானாட மயிலாட என்று "மயக்கத்தில்" இருந்துவிட்டு மின்வெட்டை பற்றி சிந்திக்க மறந்து போனதின் தண்டனை இது.
- "தினமும்" ஏதாவது ஓர் "பட்டப்பெயர்" நிகழ்ச்சி..ஏதாவது ஒரு "புகழ்ச்சி" போதை என்று அந்த காலத்து மன்னர் அளவிற்கு தன்னை நினைத்துகொண்டு செயல்பட்டதற்கு மக்கள் கொடுத்த மரண அடி..!
- மகள் கனிமொழியை பதவி கொடுத்து "திணித்த" செயலுக்கு கொடுத்த தண்டனை
- சென்னை கவுன்சிலர்களின் "அராஜகத்தில்" நொந்து போன மக்களின் மௌன புரட்சியின் வேகம் இது..!!
- எதிலும் சுய தம்பட்டம்..!! வெட்டிப்பேச்சு..!!
- பணத்தால் அல்ல..பலம் மிக்க ஊடகத்தால் கூட மக்களை விலைக்கு வாங்க முடியாது என்று எதிரிகளுக்கு "உணர்த்திய" தேர்தல் இது..!
No comments:
Post a Comment