Saturday, 7 May 2011

பத்திரிகைகள் செயல்பாடு அக்கிரமம்: கருணாநிதி


ஜூனியர் விகடன் , குமுதம் , துக்ளக் முதலிய வார இதழ்கள் கனிமொழி ,ராஜா , டூ ஜி அலை வரிசை ஊழல் பற்றி எழுதி வருவதை இவர் அக்கிரமம் என்கிறார் !!!.

கனிமொழியின் பெயர் இரண்டாவது குற்றப் பத்திரிகையில் சேர்க்கப் பட்டது பற்றி முரசொலியிலோ, தினகரனிலோ செய்தி வரவில்லையே, ஏன்?

"அலை ஓசை" பத்திரிகை அடித்து நொறுக்கி அங்கே வேலை செய்த ஊழியர்கள் பட்ட பாடு சொல்லவே முடியாத ஒன்று." மக்கள் குரல்" எனும் பத்திரிக்கையின் "குரல்வளை" நசுக்கப்பட்ட விதம் பற்றி இன்றைய இளைஞர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. "சோ" நடத்தும் "துக்ளக்" பத்திரிக்கை எவ்வளவு முறை "பெண்டு" நிமிர்த்த பட்டது தெரியுமா? இவையெல்லாம் தான் பத்திரிக்கைகளை நீங்கள் அடக்கி,காட்டுத்தர்பார் செய்த காரியம் தெரியுமா? குமுதம் வார இதழ் "கவனிக்கப்பட்ட" முறை..சிறு சிறு பத்திரிகைகள் அறவே ஒழிக்கப்பட்டதும், அதன் ஆசிரியர்களில் ஒரு சிலர் "மேலோகம்" அனுப்பப்பட்டதும்..கம்யுனிஸ்ட் கட்சியின் "தீக்கதிர்"பட்ட பாடு கொஞ்சமா? வாங்கப்பட்ட நீதி..எப்படி அது சாத்தியம்? ஆட்சி அதிகார "துஷ்பிரயோகம்தானே" சொல்லுங்கள்? பதவி என்பது உங்களுக்கு உங்கள் குடும்பம் மட்டுமே வாழவேண்டும்..!! அவர்கள் செய்யும் அக்கிரமங்களை யார் எடுத்து சொல்லுவது.

குற்றங்களை குறைகளை சுட்டிக்காட்டும்போது உங்களை போன்றோர் "திருந்த"பார்க்க வேண்டும்..உங்கள் பிள்ளைகள் செய்யும் ஊழல்கள் குற்றங்களை நீங்கள் தடுக்க பார்க்க வேண்டும்..தனி மனித ஒழுக்கத்தில் உங்களை போன்றோர் சிறக்க வேண்டும்..செய்தீர்களா? முயற்சித்தீர்களா? முடியாத போது..பத்திரிக்கைகளை "குறை' சொல்வதை நிறுத்த பாருங்கள்..தமிழனின் தன்மானத்தை கேவலப்படுத்தி வாழும் போக்கை கைவிடுங்கள்..வயதிற்கு ஏற்ப நடக்க முயற்சியுங்கள்..அதை எல்லாம் விட்டுவிட்டு "பதவியை கொண்டு அடக்கி ஆளும் முரட்டு தைரியத்தை விட்டு ஒழியுங்கள்".

வன உரிமைகள் சட்டத்தின்படி, பழங்குடியினருக்கு, தி.மு.க., அரசு எதையும் செய்யவில்லை என, கம்யூனிஸ்ட்கள் கூறியிருப்பது தவறு. சில ஏடுகளும், ஊடகங்களும், "நடுநிலை' என்ற போர்வைக்குள் புகுந்து கொண்டு சேட்டை விமர்சனங்கள் செய்கின்றன. "புலன் விசாரணை' என்ற பெயரில், வெளியிடும் செய்திகள் அக்கிரமமானவை. இந்தியா, மிகப்பெரிய ஜனநாயக நாடு. எனினும், ஜனநாயகம் முதிர்ச்சி அடையவில்லை; வளரும் நிலையில் தான் இருக்கிறது. நாட்டை, அனைத்து நிலைகளிலும் கைகொடுத்து தூக்கி விடுவதிலும், மக்களை சரியான திசையில் வழி காட்டுவதிலும், தமது கடமையையும், பொறுப்பையும் உணர்ந்து ஏடுகளும், ஊடகங்களும் செயல்பட வேண்டும்.

முதலில் நாங்கள் ஊழலே செய்யவில்லை என்றும் ராசா தலித் என்பதால் பழி வாங்க படுகிறார் என்றும் சொன்னீர்கள் ... பிறகு அதை அரசாங்கத்திற்கு இழப்பு என்று தான் சொல்ல வேண்டும் என்றும் அதை ஊழல் என்று சொல்ல கூடாது என்றும் சொன்னீர்கள்.... பிறகு அது கைது செய்யப்படுவதாலேயே ஒருவர் குற்றவாளி ஆகி விட முடியாது என்று ஆனது... பின் கட்சி காப்பாற்றும் என்றும், கட்சியை காட்டிகொடுக்க கூடாது என்றும் ஆனது.... அதுவே சட்டப்படி எதிகொள்வோம் என்று ஆகி, இப்போது ராசாதான் முழு சதிக்கும் காரணம் என்று ஆகி விட்டது... எது எப்படியோ, ஊழல் நடந்தது உண்மை என்று உமது வக்கீலே ஒப்பு கொண்டார். தலித் மக்களின் விடிவெள்ளி தகத்தகாய சூரியன் ராசா கனிமொழிக்காக காட்டிகொடுக்கப்பட்டார்.... வாழ்க கட்சியின் காட்டிகொடுக்காத கொள்கை....


No comments:

Post a Comment