Friday, 6 May 2011

2 ஜி ஸ்பெக்ட்ரம்: ராஜாதான் முழுச்சதிக்கும் காரணம்

2 ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மாஜி அமைச்சர் ராஜாதான் முழுச்சதிக்கும் காரணம் என்றும், இதில் கனிமொழிக்கு எவ்வித சம்பந்தமும் இல்லை என்றும் இந்தியாவின் பிரபல வக்கீல் ராம்ஜெத்மலானி இன்றைய விசாரணையில் கோர்ட்டில் தெரிவித்தார். கனிமொழிக்கு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையில் அவர் வாதாடுகையில் பேசியதாவது.


" எவ்வித தொடர்பும் கிடையாது. அவர் எந்தவொரு ஆவணத்திலும் கையெழுத்திடவில்லை. இவரால் எதுவும் நிறைவேற்றப்படவில்லை." லைஞர் தொலைக்காட்சியில் ஒரு பங்குதாரர் மட்டுமே . நாள்தோறும் என்ன நடக்கும் என்ற விஷயத்தில் இவரது கவனத்திற்கு வராது. ராஜாதான் முழுச்சதிக்கும் முக்கிய காரணம். மேலும் கனிமொழி ஒரு எம்.பி., சட்டத்தை மதித்து நடப்பவர், ஒரு பெண்ணும்கூட இதனால் இவருக்கு ஜாமீன் வழங்கி நீதி காக்க வேண்டும் . இவ்வாறு ராம்ஜெத்மலானி வாதாடினார்.

நான் எந்தவொரு கடும் நடவடிக்கையையும் சந்திக்க தயாராக இருக்கின்றேன்,. சட்டம் கோர்ட் என்ன சொல்கிறதோ அதனை ஏற்பேன். ஜாமீன் பெறவேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லை என கனிமொழி முன்னதாக அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment