Tuesday, 10 May 2011

காங்கிரஸ், ராஜபக்ஷேவிற்கு கொடுத்த ஊக்கம், ஊட்டம், தமிழர்களை நிராதரவாக்கியது.

வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, தமிழக மீனவர்கள் மீது, இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்தி, ஒரு மீனவர் கொல்லப்பட்டார். உடனே, அன்றைய இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேயை, வாஜ்பாய் தொலைபேசியில் அழைத்தார்.

"இனி ஒரு துப்பாக்கி தோட்டா, இந்திய மீனவர்கள் மீது பாயுமானால், இலங்கைக்கான அனைத்து பொருளாதார உதவிகளையும் உடனடியாக நிறுத்துவோம்' என எச்சரித்தார். விளைவு, வாஜ்பாய் பிரதமராக இருந்த வரை, தமிழக மீனவர்களை தொட்டு பார்க்கும் தைரியம், இலங்கை கடற்படைக்கு இல்லாமல் இருந்தது.


சோனியா பதவியேற்றது முதல், தமிழர்களை ஒழிக்கும் ராஜபக்ஷேவிற்கு, வலதுகரமாக விளங்கி வருகிறார். தமிழர்களையும், தமிழகத்தையும் அவமதிக்கும் வண்ணமாக, இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு, ராஜபக்ஷேவை, சிறப்பு விருந்தினராக அழைத்தார். இதையே மீண்டும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியிலும் தொடர்ந்தார்.இலங்கை அதிபரின் சகோதரர், கோத்தபய ராஜபக்ஷே தலைமையிலான குழு, இந்திய ராணுவ உதவியையும், ஆலோசனையையும் பெற, ஐந்து முறை இந்தியா வந்து சென்றிருக்கின்றனர்.

"இலங்கை அரசு போர்க்குற்றம் செய்துள்ளதாக ஐ.நா., குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழலை சமாளிக்க, இந்தியாவின் ஆதரவு அவசியமாகிறது,'' என, அதிபர் ராஜபக்ஷே தெரிவித்துள்ளார். "இந்தியா எல்லா காலங்களிலும் இலங்கைக்கு ஒத்துழைத்து வருகிறது. எனவே, இந்தியாவுடனான எங்களது உறவு எப்போதும் நல்ல நிலையிலேயே இருக்கிறது. ஐ.நா., குழு அளித்துள்ள அறிக்கையை நாங்கள் சாதாரணமாக எடுத்து கொள்ளவில்லை. இதற்கு தக்க முறையில் பான் கி மூனிடம் எடுத்து சொல்வோம். இதனால், ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழலை சமாளிக்க இந்தியாவின் உதவி தேவைப்படுகிறது.இவ்வாறு ராஜபக்ஷே கூறினார்.

No comments:

Post a Comment