Monday, 16 May 2011

ஐ.நா. அறிக்கை: இந்திய ஆதரவை கோருகிறார் இலங்கை அமைச்சர்

1977- ல் நாடாளுமன்றத்தில் தமிழர்களுக்கு எதிராக நடந்த தீர்மானத்தால் இனப் படுகொலை நடந்தது மத்திய அரசுக்கு தெரியாதா? போர்க் குற்ற விசாரணையில் மற்ற நாடுகள் காட்டுகின்ற அக்கறையைக்கூட மத்திய அரசு காட்டவில்லையே, ஏன்?சட்டசபை தேர்தல் முடிவுகளில் தமிழ் நாட்டு மக்கள் தி.மு.க ஈழ தமிழர் விஷயத்தில் விட்டுகொடுத்து காட்டி கொடுத்ததை குறித்து தண்டித்து இருப்பதை மறக்ககூடாது. தி.மு.க வின் நிலை

இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவை சந்திக்கிறார்.தில்லி வரும் அவர், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவை திங்கள்கிழமை சந்தித்து இதுகுறித்துப் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்நாட்டுப் போர் தொடர்பாக இலங்கை அரசுக்கு எதிராக அமைந்துள்ள ஐ.நா. அறிக்கை குறித்து தங்கள் நாட்டின் நிலை குறித்து விளக்கவும், இலங்கைக்கு ஆதரவு திரட்டவும் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் முயற்சி மேற்கொண்டுள்ளார்.இலங்கை அரசு நடத்தியது இனப்படுகொலை என்று ஐ.நா. குழு குற்றம் சாட்டியது. இதை அடுத்து, அந்நாட்டு அதிபரை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

ஐ நா பாதுகாப்பு சபையில் உலக நாடுகளிடையே பொது வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்த 29 நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

No comments:

Post a Comment