தன் மகள் கனிமொழிக்கு ஒரு பிரச்னை என்றவுடன், உயர்மட்டக் குழு கூடுகிறது. தமிழனுக்கோ, தமிழக விவசாயிகளுக்கோ பிரச்னை என்றால், அர்த்தமற்ற, கேள்வி - பதில் அறிக்கை தான், கருணாநிதியிடமிருந்து வெளி வருகிறது.ஐந்தாண்டுகள் தமிழகத்தை ஆண்ட கருணாநிதிக்கு, மின் பற்றாக்குறையை போக்கக்கூடிய எந்த யோசனையையும், திட்டத்தையும் சிந்திக்க தெரியவில்லை.
நாட்டை, ஊழல் மயமாக்கவும், அதை, விஞ்ஞானப்பூர்வமாக மறைக்கவும் மட்டுமே சிந்திப்பதாக தெரிகிறது.எது செய்தாலும், கேள்வி எழுப்பக் கூடாது. இலவசத்தை வாங்கிக்கொண்டு, இவர்கள் செய்வதற்கெல்லாம் தலையாட்ட வேண்டும். இலவசம் கொடுத்து, தமிழகத்தை கடனாளியாக்கியது தான் இவர்கள் செய்த சாதனை.
முந்தைய காலங்களில் தமிழக அரசின் நிர்வாகம் இருந்தது; இப்போது, காலம் மாறிவிட்டது. தமிழக நிர்வாகம் குறித்து, மத்திய அரசின் உயரதிகாரிகள் பலர் மிகுந்த வியப்பும், வேதனையும் தெரிவித்தனர். "தமிழக அரசில் முதல்வரில் இருந்து, அனைத்து அமைச்சர்களும், செயலர்களும், தங்களுக்கு கீழே பணிபுரியும் செயலர்களுக்கும், தனிச் செயலர்களுக்கும் ஓய்வு அளித்து வீட்டுக்கு அனுப்பாமல், மீண்டும், மீண்டும் பதவி நீட்டிப்பு வழங்கி பணியமர்த்திக் கொள்கின்றனராமே... உண்மையா?' என கேட்டனர். "ஆம்... மிகப் பெரிய அதிகார துஷ்பிரயோகம்' என, பதில் கூறினேன். - என்.முருகன், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி
அரசு, முதலில் கவனிக்க வேண்டிய விஷயங்களில் இதுவும் ஒன்று.வேறு எந்த துறைகள் சரியாக செயல்படாவிட்டாலும் வருவாய்த்துறை, காவல்துறை, மருத்துவத்துறை, கல்வித்துறை ஒழுங்காக இருந்தாலே, மக்கள் நல்வாழ்வு பாதிக்காமல் மாநிலத்தின் முன்னேற்றம் தடையின்றி தொடரும்.மருத்துவர்கள் சரியான நேரத்துக்கு பணிக்கு வர வேண்டும். தரமான மருந்துகளை, சரியான விலைக்கு வாங்கி நோயாளிகளுக்கு தர வேண்டும். போலீசார் தங்களுக்கு இடப்பட்ட பணிகளை, குறித்த காலத்தில் முடிக்கின்றனரா என்பதை, தலைமை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். அரசுப் பள்ளி, கல்லூரிகளில், ஆசிரியர்கள் சரியான நேரத்திற்கு பணிக்கு வந்து, பாடம் கற்பிக்க வேண்டும். இவற்றை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை, யுத்த வேகத்தில் புதிய அரசு நிறைவேற்ற வேண்டும்.
இலவச திட்டங்களுக்கும், முதல்வர், துணை முதல்வர் பங்கேற்கும் விழாக்களுக்கும், இத்தகைய அதிகாரிகள் தங்கள் முழு நேரத்தையும் செலவழித்து, தங்கள் கடமைகளை நிறுத்தியதால், கடந்த நான்காண்டுகளாக நிர்வாகம் சீர்கெட்டுப் போனது. இதை சரிசெய்தாலே புதிய அரசு, தமிழகம் வளர்ச்சிப் பாதையில் பீடு நடை போட, முதல் அடியை எடுத்து வைத்ததாகும்.அரசு நிர்வாகத்தில் ஒவ்வொரு பணியை செய்வதற்கும் விதிகள் உள்ளன. அதன்படி செய்தால், தவறுகள் வராது. இதனால், வெளிப்படைத் தன்மை தேவை என்ற கோரிக்கைக்கே தேவையிருக்காது.பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத் துறை இவற்றில் ஒப்பந்தம் பெறுவதில் லஞ்சம் பல ஆண்டுகளாக தொடர்கிறது. தகுதியில்லாத ஒருவருக்கு இது போன்ற கான்ட்ராக்ட்களை விதிகளை மீறி வழங்கி, அதற்காக ஒரு குறிப்பிட்ட சதவீத தொகையை, அதிகாரிகளே பெற்று விடுகின்றனர். இந்த ஊழலை ஒழிக்காவிட்டால் அரசு நிர்வாகம், நாட்டு நலன் சீரழிந்து விடும்.

No comments:
Post a Comment