மேலை நாடுகளில், விகிதாச்சார முறை தேர்தல், தேர்வு பெற்ற பிரதிநிதிகளை திரும்ப பெறுதல் போன்று, தேர்தல் முறைகளில் புதுமைகளை புகுத்தி செயல்படும் நேரத்தில், தேர்தல் கமிஷனின் அதிகாரங்களை குறைக்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கருணாநிதி நினைப்பது, எந்த வகையில் நியாயம்?ஒரு வேளை, தன் கடுமையை காட்டாமல் இருந்திருந்தால், தேர்தல் கமிஷனை, கருணாநிதி பாராட்டியும், ஜெயலலிதா விமர்சனமும் செய் திருப்பர். எப்படியோ, தேர்தல் கமிஷனுக்கு இரண்டு பக்கமும் இடி தான்.கருணாநிதி கூறுவது போல், தேர்தல் கமிஷனுக்கு கடிவாளம் போட்டால், கொஞ்ச, நஞ்சம் இருக்கும் ஜனநாயகமும், செத்து மடியும.
தமக்கு தேவைப்படும்போதெல்லாம், குடும்பத்தில் நடக்கும் தனிப்பட்ட விஷயங்களுக்காக, தி.மு.க., பொதுக்குழு, நிர்வாகக் குழு, உயர்மட்டக் குழு என முதல்வர் கூட்டச் சொல்வது, எந்த வகையில் நியாயம்? தன் குடும்பத்தில் உள்ளவர்களை பாதுகாத்துக் கொள்ள, கட்சியை பக்கபலமாக பயன்படுத்துவது தர்மமா?

No comments:
Post a Comment