ஜி' சேவையுடன், "ஆப்பிள் ஐ போன் 4' மொபைல்போன் சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டது. ஐபாட், எச்.டி., கேமரா, மேப், துல்லியமான வீடியோ அழைப்பு உள்ளிட்ட பல்வேறு அதிநவீன வசதிகள் கொண்ட, "ஆப்பிள்' நிறுவனத்தின் "ஐ போன் 4' மொபைல் போன் விரைவில் விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழக ஆபரேட்டிங் பிரிவு அதிகாரி அனந்தராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில் ராஜீவ் ராஜகோபால் பேசும்போது, "அனைத்து தரப்பினரின் ஆவலை பூர்த்தி செய்யும் வகையில், "ஆப்பிள் ஐ போன் 4' விற்பனைக்கு வந்துள்ளது. ஏர்டெல் "3ஜி' சேவையுடன் இந்த மொபைல்போன் கிடைப்பது கூடுதல் சிறப்பம்சம். வீடியோ அழைப்பு மற்றும் இன்டர்நெட் வசதியை இந்த மொபைல்போன் மூலம் தொடர்ச்சியாக கண்டுகளிக்கலாம்' என்றார். இந்த, "ஐ போன் 4' மொபைல்போன் 16 ஜி.பி., வசதியுடன், 34 ஆயிரத்து 500 ரூபாய்க்கும், 32 ஜி.பி., வசதியுடன் 40 ஆயிரத்து 900 ரூபாய்க்கும் விற்பனைக்கு கிடைக்கிறது.

No comments:
Post a Comment