Monday, 16 May 2011

பணம் என்பதை நாம் போகும்போது எடுத்துக்கொண்டு போகப்போவது இல்லை என்ற உண்மையை உணர்ந்து மக்களுக்காகவும் நாட்டுக்காகவும் நல்லது செய்ய முற்படுவீர்

இந்த அரசு உடன் கவனம் செலுத்த வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். அவை:
1.ஊழலை ஒழித்தல்,
2.விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துதல்,
3.நிர்வாகச் சீர்கேடுகளை ஒழுங்குபடுத்துதல்,
4.அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல்.
5.அனாவசிய செலவுகளைக் கட்டுப்படுத்துதல்.

தெருவுக்குத் தெரு காளான்களாகி இருக்கும் "டாஸ்மாக்' கடைகள், கல்விக் கொள்ளை, உயர் கல்வியில் நடக்கும் ஊழல்கள் என்று தமிழகத்தை எதிர்நோக்கும் அத்தனை பிரச்னைகளையும் கடந்த ஓராண்டாக எல்லா கூட்டங்களிலும் முதல்வர் ஜெயலலிதா பேசி வந்திருக்கிறார் என்பதால், புதிதாக அவருக்கு எதையும் நாம் நினைவுபடுத்தத் தேவையில்லை.

இதை ஒரு நல்ல சந்தர்பமாக எடுத்துக்கொண்டு மக்களுக்காக நல்ல பணி திட்டங்களை( பாலங்கள், மின்னுர்ப்பத்தி திட்டங்கள், நல்ல சாலை வசதி, கல்வி வசதி, விவசாய தன்னிறைவு திட்டங்கள் இன்னும் பல ) உருவாக்கி அதனை நல்ல முறையில் செயல்படுத்தி மக்களிடம் நல்ல பெயரை பெறுங்கள். அது இல்லாமல் வெறும் எதிர்கட்சி பழிவாங்கல் மற்றும் பணம் பண்ணும் திட்டங்கள் போன்றவைகளை அறவே விட்டொழித்து தமிழ்நாட்டை ஒரு நல்ல மற்றும் சிறந்த மாநிலமாக உருவாக்க உழையுங்கள் பின்னர் அடுத்த ஆட்சி அமைக்க மக்களே உங்களை தேர்ந்தேடுக்கவிரும்புவர். மேலும் பணம் என்பதை நாம் போகும்போது எடுத்துக்கொண்டு போகப்போவது இல்லை என்ற உண்மையை உணர்ந்து மக்களுக்காகவும் நாட்டுக்காகவும் நல்லது செய்ய முற்படுவீர்.

No comments:

Post a Comment