Monday, 16 May 2011

மூக்கணாங்கயிறுகள் மாற்றுவதால் மாடுகள் மகிழ்ச்சி அடையுமா? - ஹோ சி மின்.

ஜெயலலிதா, இந்த ஐந்தாண்டு இடைவெளியேகூட ஒருவகையில் பார்த்தால் அவருக்குப் பல பாடங்களைக் கற்றுத் தந்திருக்கும். தனது முந்தைய ஆட்சிக்காலத்தில் என்னென்ன தவறுகள் நடந்தன என்பதைச் சிந்தித்துச் சீர்தூக்கி, மக்களால் நிராகரிக்கப்பட்ட கடந்த திமுக ஆட்சியின் தவறுகளைத் தவிர்த்து, ஒரு நல்லாட்சியைத் தலைமையேற்று நடத்தும் பக்குவத்தை இந்த இடைவெளி அவருக்கு நிச்சயமாக ஏற்படுத்தியிருக்கும். டீவியை அரசுடைமையாக்குவது ஒன்றும் சமூகத்திற்கு பயன் தரும் செயல் அல்ல,அதை விட தனியார் பள்ளிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும் அல்லது நன்கொடை என்ற பெயரில் பெற்றோர்களிடம் பணம் பறிப்பதை தடுக்க வேண்டும்,அனைவருக்கும் தரமான கல்வி ,அதிக செல்வில்லாமல் கிடைக்க வழி செய்ய வேண்டும்,இது தான் ஒரு புது அரசு செய்யவேண்டும்,அதை விடுத்து சாராய கடையை அரசே நடத்துவது,கேபிள் டீவியை அரசே நடத்துவது எல்லாம் தேவையற்றவை.

தெருவுக்குத் தெரு காளான்களாகி இருக்கும் "டாஸ்மாக்' கடைகள், கல்விக் கொள்ளை, உயர் கல்வியில் நடக்கும் ஊழல்கள் என்று தமிழகத்தை எதிர்நோக்கும் அத்தனை பிரச்னைகளையும் கடந்த ஓராண்டாக எல்லா கூட்டங்களிலும் முதல்வர் ஜெயலலிதா பேசி வந்திருக்கிறார் என்பதால், புதிதாக அவருக்கு எதையும் நாம் நினைவுபடுத்தத் தேவையில்லை.

இனிமேல் இலங்கை கடற்படைக்கு தமிழக மீனவர்களை காட்டு மிராண்டித்தனமாக சுட்டுத் தள்ளும் நிலை வராது என்றும் மக்கள் நினைக்கவேண்டும். மேலும் கச்சத் தீவையும் மீட்பேன் என்றும் சொன்னேர்களே? 2008- 2009 - ல் ஈழத்தில் போர் நடந்த நேரத்தில் அன்று நாடாளுமன்றத் தேர்தல் நடந்தப் போது, தேர்தலில் வெற்றிப் பெற்றால் தனி ஈழம் அமைப்பேன் என்றும் சொன்னீர்களே? அமைக்காவிட்டாலும் பரவாயில்லை! ஈழம் அவர்களது தாயக மண் என்று உலகறியச் செய்து அவர்களின் உரிமையைப் பெற்றுத்தாருங்கள்.

No comments:

Post a Comment