Saturday, 14 May 2011

2 - ஜி ஸ்பெக்ட்ரம் ; கனிமொழிக்கு இன்று ஜாமின் கிடைக்கவில்லை: அரசியல் எதிர்காலம்?

கேள்விக்குறியாகும் கனிமொழியின் அரசியல் எதிர்காலம்?

2 - ஜி ஸ்பெக்ட்ரம் ; கனிமொழிக்கு இன்று ஜாமின் கிடைக்கவில்லை.

தேசிய அரசியலில் பங்கெடுத்த பெண்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அந்த வாய்ப்பு கனிமொழிக்கு கிடைத்தது. அவர், எம்.பி., என்ற அளவில் மட்டுமல்ல, தி.மு.க., தலைவர் மற்றும் தமிழகத்தின் முதல்வர் கருணாநிதியின் மகள் என்பதால், கூடுதல் தகுதிகளைப் பெற்றவர். அவருக்குக் கிடைத்த வாய்ப்பின் மூலம், கட்சியின் நிலையை டில்லியில் நிலைப்படுத்துவதோடு, தேசிய அளவில் தி.மு.க.,வுக்கு ஒரு தலைவராக விளங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. கட்சியிலிருந்து, டில்லிக்கு அனுப்பப்படும் ஒருவர், கட்சி சொல்லும் கருத்துக்களை பிரதிபலிக்கக் கூடியவராக இருப்பார். னால், "ஸ்பெக்ட்ரம்' விவாகரம் இந்த எதிர்பார்ப்புகளை தவிடு பொடியாக்கிவிட்டது. வழக்கின் பின் விளைவுகள், அரசியலில் கடும் பாதிப்புகளை அவருக்கு ஏற்படுத்தும் என்றே கூறப்படுகிறது. "ஸ்பெக்ட்ரம்' விவகாரம் தி.மு.க.,வின் மதிப்பை டில்லியில் குறைத்துவிட்டது.

No comments:

Post a Comment