Monday, 16 May 2011

முன்னாள் முதல்வருக்குத்தான் நமது மக்கள் நன்றி சொல்ல வேண்டும்.

கட்சி யின் ஊழல் நிகழ்வுகளை பட்டி,தொட்டியெங்கும் கொண்டு சென்ற முன்னாள் முதல்வருக்குத்தான் நமது மக்கள் நன்றி சொல்ல வேண்டும். 2ஜி விவகாரம் ஆக்டோபஸôக தனது கரங்களை விரிக்கத் தொடங்கிவிட்டது. தேர்தலில் திமுக தோற்றுப் போய்விட்டதுடன் விவகாரம் முடிந்துவிடப்போவதில்லை.

ஊழலுக்கு எதிரான போராட்டம் நடத்தும் அண்ணா ஹஸôரேவும் அவரது நண்பர்களும் இப்போது எண்ணத் தொடங்கியிருப்பார்கள் என்று நினைக்கிறேன். தமிழ்நாட்டில் காங்கிரஸýம் அதன் கூட்டணிக் கட்சியான திமுகவும் படுதோல்வியைச் சந்தித்திருக்கின்றன. 65 தொகுதியில் போட்டியிட்ட அந்தக்கட்சியால் இரட்டை இலக்கங்களில்கூட வெற்றிபெற முடியவில்லை. புதுச்சேரியிலும் காங்கிரஸýக்கு எதிராகவே மக்கள் வாக்களித்திருக்கிறார்கள்.

மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி பெற்றிருக்கும் பிரமாண்ட வெற்றியில் காங்கிரஸýக்கு எந்தப் பங்கும் இல்லை. அது முழுக்க முழுக்கு மம்தா பானர்ஜிக்காக மட்டுமே கிடைத்த வெற்றி. பிகாரின் நிதீஷ்குமார், ஒரிசாவின் நவீன் பட்நாயக், தேசியவாத காங்கிரஸின் சரத் பவார் ஆகியோருடன் அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவும், திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பாஜனர்ஜியும் வலுவான பிராந்தியத் தலைவர்களாகி இருக்கின்றனர்.

இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியைப் பெருமைப்பட வைத்திருக்கும் ஒரே தலைவர் தருண் கோகோய்தான். தனது நிர்வாகத்தாலும், அரசியல் திறமையாலும் அசாம் கண பரிஷத், பாஜக ஆகிய கட்சிகளை தடம் தெரியாமல் செய்துவிட்டார்.

No comments:

Post a Comment