Saturday, 21 May 2011

Kanimozhi arrresrt, What happennira 2 nira radia

உங்களுக்கு ஒரு பெண் இருந்து அவர் கைது செய்யப்பட்டால் நீங்கள் எந்த மனநிலையில் இருப்பீர்களோ அந்த மனநிலையில் தான் நான் இருக்கிறேன்....கலைஞர்

பெத்த புள்ளையை திருட்டு புள்ளையா ஜெயிலுக்கு அனுப்பாம வேற என்க அனுப்புவாங்க?

சரிப்பா கனிமொழி கைது செய்தது நல்ல செயல்.பாராட்டுக்குரியது.ஆனால் இவர்களுக்கு எல்லாம் மையமாக மாமி வேலை பார்த்ததால் முதன் முதலில் சிபிஐ ஆல் விசாரணை செய்யப்பட்ட நிரா ராடிய ஏன் இன்னும் கைது செய்ய பட வில்லை.

கனிமொழியின் கைது பற்றி திமுகவினரின் கருத்துக்களை படித்தேன். அனைவருமே கனிமொழி கைது ஏதோ உலகத்தில் நடக்க கூடாதது நடந்து விட்டதைப்போன்று சொல்கிறார்கள். ராசா கைது செய்யப்பட்டபோது இவர்கள் அனைவரும் எங்கே போனார்கள். மேலும் கொள்ளை அடிக்கும்போதும், கோவை, ஊட்டி , சென்னை மற்றும் இதர நகரங்களில் சொத்துக்களை கனி வாங்கி குவிக்கும்போதும் இவர்கள் எங்கே சென்று இருந்தார்கள்? தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படவேண்டியவர்களே. இதே குற்றங்களை ஒரு காங்கிரசு அல்லது அதிமுக காரர் செய்து இருந்தால் திமுக காரர் என்ன சொல்லுவார். நிகழ்வுகள் அனைத்தையும் குற்றம் சுமத்தப்பட்டவர்-நீதிமன்றம் என்ற பார்வையில் பார்ப்பது தான் ஆரோக்கியமானது. திமுக தலைவர் கூறுவது போல, ராசா பூணூல் போடாதது தான் குற்றம், இது ஆரியம், திராவிடம் யுத்தம் என்பதெல்லாம் நகைப்புக்குறியன. இப்படிப்பட்ட தலைவரின் கீழ் கோடிக்கணக்கில் தொண்டர்கள் இருப்பது விமர்சனம் செய்வதற்கு ஏற்றதாக ஆகிவிடும். மேலும் ராசா கைது செய்யப்பட்டபோது மேல்நிலைக்குழு கீழ்நிலைக்குழு எல்லாம் கூட்டப்படவில்லை. டாக்டர் கிருஷ்ணசாமி சொன்னது போல ராசா தலித் என்பதால் அவர் கைவிடப்பட்டார் போலும். அதுமட்டுமின்றி, கனிக்காக வாதாடிய வக்கீல் ராம் ஜெத்மலானி அவர்கள் ராசா தான் குற்றவாளி என்று தெளிவாகவே கூறியுள்ளார்.


தி.மு.க., காங்கிரஸ் இடையேயான உறவு பாதிக்கப்படாது ஏன்னென்றல் அடுத்து கலைஞர் மகள் கனிமொழி அம்மையார் சோனியா அவர்களையும் இந்த குற்ற ஊழலில் சம்பதபட்டிருகிறார் என்று கூற வாய்ப்புள்ளது இந்த வழக்கில் அவரையும் சேர்த்து விட்டால் இந்த வழக்கு போபர்ஸ் ஊழல் போல் அடுத்த 20 ஆண்டு காலம் நீண்டு கொண்டே சென்று விடும் பிறகு சிபிஐ நீதி மன்றம் ஒரு தீர்பளிக்கும் அதில் வழக்கின் ஊழல் தொகை ஒரு லட்சத்து எழுபதிரயிரம் கோடி ஆனால் வழக்கிற்காக நமது அரசு செலவு செய்த தொகை இரண்டு லட்சம் கோடிகள் இதற்கு மேல் இந்த வழக்கிற்கு செலவு செய்ய தேவையில்லை இந்த நீதி மன்றம் கருதுவதால் வழக்கை தள்ளுபடி செய்கிறேன் என்று கூறலாம்.

(ஊதாரணம்)
1 ) போபர்ஸ் வழக்கை போல்

2) டான்சி வழக்கு அரசு நிலத்தை ஜெயா எடுத்து கொண்டது தவறு எனவே இந்த இடத்தை அரசிடமே திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று கோர்ட் அறிவுறுத்தியது இதையே ஒரு சாதாரணஅரசு ஊழியர் 10000 ரூபாய் எடுத்து கையாடல் செய்திருந்தால் போலீஸ் அவரை கைது செய்து அவரை நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்திருக்கும் பிறகு கோர்ட் விசாரணை செய்து , அவர் 10000 ரூபாய் எடுத்தது உண்மை அவரே ஒப்புக்கொண்டார் அதனை அவர் திரும்ப கார்டில் ஒப்படைத்துவிடுகிறேன் என்று கூறுவதால் அவரை விடுதலை செய்யப்படும் என்று கூற முடியாது மாறாக அவருக்கு 6 மாதம் முதல் 2 வருடம் வரை தண்டனையுடன் அவரது வேலையும் பறிபோகும். ஆனால் இவர் ஊழியர் அவரோ முதல்வர் அதனால் தான் தீர்ப்பில் வித்தியாசம்) பாம்பின் கால் பாம்பு அறியும் எனவே தான் கனிமொழி கைதால் தி.மு.க., காங்கிரஸ் இடையேயான உறவு பாதிக்கப்படாது

No comments:

Post a Comment