கனிமொழி கைதுக்குப் பின், நேற்று முன்தினம் மற்றும் நேற்று கருணாநிதியுடன் நடந்த ஆலோசனையில், காங்கிரஸ் மீதான வெறுப்பை தி.மு.க., தலைவர்கள் கொட்டியுள்ளனர். "மத்தியில் இரண்டு முறை ஆட்சி அமைக்க உதவியாக இருந்த நமக்கு, இப்படியொரு துரோகத்தை செய்து விட்டனரே' என, காங்கிரஸ் மீது குற்றம் சுமத்திப் பேசியுள்ளனர்.
- கனிமொழி கைதுக்கும் காங்கிரஸ் உறவுக்கும் என்ன தொடார்பு ?காங்கிரஸ்காரரான கல்மாடிகூட கைது செய்யப்பட்டு திகார் ஜெயிலில்தான் இருக்கிறார். கட்சி வேறு குடும்பம் வேறு அல்லவா ?
- உண்மையான தொண்டனுக்கு இதயத்தில் இடம். குடும்பத்தினருக்கு மந்திரிசபையில் இடம்.
- இலங்கைத் தமிழர்களுக்காக போனால் போகிறது என்று பீச் காற்றில், இரண்டுமணிநேர 'உண்ணா'விரதமும், கடித மழையும் மட்டுமே!குண்டுமழை நின்று விட்டது கண்டுபிடித்து என இவரே வானிலை ஆராய்ச்சி நிலைய இயக்குனர் ஆகி, உடனே உண்ணும் விரதத்துக்கு மாறிவிடுவார்! ஆனால் சொந்தத் துணைவியின் மகளுக்கு ஆபத்து என்றால் டெல்லி என்ன.. , செவ்வாய்க் கிரகத்துக்கே ஆனாலும் பறப்பார்!எப்படிப்பட்ட தியாக உள்ளம்! தேச பக்தி!உலக செந்தமிழர்களின் ஒப்பற்ற தலைவா.நடிப்பில் உன்னை விஞ்ச ஆள் ஏது?
- ஆயிரம் வருஷம் இருந்தால் சாதரணமாக எவ்வளவு சுருட்ட முடியுமோ அதை ஏழு வருஷம் மத்திய ஆட்சியில் இருந்தும் ஐந்து வருஷம் மைனாரிட்டி அரசு அமைத்தும் சுருட்டி சாதனை படைத்தது விட்டீர்கள்.
- மக்களின் கடும் சாபத்திற்கு ஆளான உங்கள் கட்சி வேரோடு மட்டுமல்ல வேரடி மண்ணோடும் அழிய வேண்டும் என்பதே இந்தியாவில் வசிப்பவர்கள் மட்டுமல்ல....குடும்பத்தையெல்லாம் பிரிந்து கடல் கடந்து சென்றும் சம்பாதித்து கஷ்டப்படும் தமிழர்கள், ஈழ தமிழர்கள் என எல்லோரது விருப்பமும் ஆகும்.
- இவர் எல்லோரும் கூடி என் மகளை பழி வாங்கி விட்டார்கள்,, என கூறுவது நீதி துறையையா ? அப்படியானால் இவர் மீது ஏன் நீதி துறையை அவமானம் செய்தததற்கு,, நீதி துறை மான நஷ்ட வழக்கு போடா கூடாது?
No comments:
Post a Comment