நாட்டில் விலைவாசி உயர்ந்தபோதும், மின்வெட்டால் தமிழகமே இருண்டபோதும், நீரின்றி பயிர்கள் வாடியபோதும், நாட்டில் வேலை வாய்ப்பு அழுகிய போதும், ரோம் பற்றி எரிந்து கொண்டிருந்தபோது, பிடில் வாசித்துக் கொண்டிருந்த நீரோ மன்னன் போல, "பெண் சிங்கம், உளியின் ஓசை, பொன்னர் சங்கர்' என்று, திரைப்படங்களுக்கு, கதை, வசனம் அல்லவா எழுதிக் கொண்டிருந்தார். "மானாட மயிலாட' என, நாட்டிய மணிகளின் நடனங்களை அல்லவா ரசித்துக் கொண்டிருந்தார். அதனால் தான், மக்கள் தெளிவான முடிவெடுத்து, கதை, வசனம் எழுதவும், நாட்டியத்தை ரசிக்கவும் முதல்வர் பதவி ஒரு தடையாக, இடையூறாக இருக்கக் கூடாது என, விடை கொடுத்து, வழி அனுப்பி விட்டனர்.இனி, நிரந்தர ஓய்வு தான்!
முகஸ்துதி செய்வதையே தொழிலாக கொண்டிருந்தவர்களை மட்டுமே அருகாமையில் வைத்திருந்தது, "என்னை புகழாதீர்கள்" என்று ஒருபுறம் சொல்லிக்கொண்டு, அதற்கு ஒரு விழா எடுத்து அங்கேயே ஆணி அடித்தாற்போல் உட்கார்ந்திருந்து காது குளிர கேட்டது. "தினமும்" ஏதாவது ஓர் "பட்டப்பெயர்" நிகழ்ச்சி..ஏதாவது ஒரு "புகழ்ச்சி" போதை என்று அந்த காலத்து மன்னர் அளவிற்கு தன்னை நினைத்துகொண்டு செயல்பட்டதற்கு மக்கள் கொடுத்த மரண அடி..! மக்களின் வரிப்பணத்திலே சில பொருட்களை மக்களுக்கு கொடுத்து விட்டு, ஏதோ தன் சொந்த பணத்திலே நட்டபட்டுக்கொண்டு வழங்கியது போல, இலவசங்கள் என்ற மாயையை உருவாக்கியது, மகனின் அராஜக செயல்களை "கட்டுப்படுத்த' முடியாத "இயலாமை"..!! மகள் கனிமொழியை பதவி கொடுத்து "திணித்த" செயலுக்கு கொடுத்த தண்டனை இது..!!

No comments:
Post a Comment