Saturday, 14 May 2011

தன்மானத் தமிழன்!

ஜெயலலிதா தலைமையிலான அஇஅதிமுக கூட்டணியின் அமோக வெற்றி என்று கூறுவதைவிட, திமுக தலைமையிலான கூட்டணிக்கு எதிராக எழுந்த மக்களின் மௌனப் புரட்சி என்று கூறுவதுதான் சரியாக இருக்கும். பெருந்திரளாக மக்கள் வாக்குச்சாவடியை நோக்கிப் படையெடுத்ததை, ஆளும் கட்சியினர் தங்களது பணப் பட்டுவாடாவின் விளைவு என்று தப்புக்கணக்குப் போட்டனர் என்றால், பல தேசியத் தொலைக்காட்சி சேனல்களின் கருத்துக் கணிப்புகளும்கூட அல்லவா, எதார்த்த நிலைமையைப் புரிந்துகொள்ளாமல் திமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்புக்குக் கட்டியம் கூறின? குழப்பம் ஆட்சியாளர்களிடமும், ஊடகங்களிடமும் இருந்ததே தவிர, மக்களிடம் இருக்கவில்லை. மின் வெட்டு, விலைவாசி உயர்வு, ஊழல் போன்ற பிரச்னைகள் திமுக ஆட்சியினர்மீது மக்களுக்குப் பரவலான அதிருப்தி ஏற்படுவதற்குக் காரணிகள் என்றாலும், திமுகவைத் துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று ஓட ஓட விரட்டியது என்னவோ "குடும்ப ஆட்சி' என்கிற அருவருப்பான விஷயம்தான்.

"நல்லவைகளை முதுகிலே சொல், கெட்டவைகளை முகத்திலே சொல்" என்று ஒரு பழமொழி உண்டு.

முகஸ்துதி செய்வதையே தொழிலாக கொண்டிருந்தவர்களை மட்டுமே அருகாமையில் வைத்திருந்தது, "என்னை புகழாதீர்கள்" என்று ஒருபுறம் சொல்லிக்கொண்டு, அதற்கு ஒரு விழா எடுத்து அங்கேயே ஆணி அடித்தாற்போல் உட்கார்ந்திருந்து காது குளிர கேட்டது. "தினமும்" ஏதாவது ஓர் "பட்டப்பெயர்" நிகழ்ச்சி..ஏதாவது ஒரு "புகழ்ச்சி" போதை என்று அந்த காலத்து மன்னர் அளவிற்கு தன்னை நினைத்துகொண்டு செயல்பட்டதற்கு மக்கள் கொடுத்த மரண அடி..! மக்களின் வரிப்பணத்திலே சில பொருட்களை மக்களுக்கு கொடுத்து விட்டு, ஏதோ தன் சொந்த பணத்திலே நட்டபட்டுக்கொண்டு வழங்கியது போல, இலவசங்கள் என்ற மாயையை உருவாக்கியது, மகனின் அராஜக செயல்களை "கட்டுப்படுத்த' முடியாத "இயலாமை"..!! மகள் கனிமொழியை பதவி கொடுத்து "திணித்த" செயலுக்கு கொடுத்த தண்டனை இது..!! சொந்த கட்சியினரின் "வேதனை"க்கு கிடைத்த விடிவுகாலம்..இந்த தேர்தல் முடிவு..!! பேரன்கள் நித்தமும் "சினிமா" எடுக்க பணம் வந்த விதம் பற்றி மக்கள் அறிந்து கொண்ட காரணத்தால் "தெரிந்த" தேர்தல் முடிவு இது. நீண்ட கால பயனுள்ள திட்டம் ஏதுமில்லை..!! சுய விளம்பரம்..!! ஏடுகளில் அறிவிப்புகள் வந்ததோடு முடிந்து போன திட்டங்கள்

ஜனநாயகத்தை, பணநாயகத்தால் வெல்ல முடியும் என்பது, திருமங்கலம் இடைத்தேர்தலின் போது, தி.மு.க.,வால், உறுதிபடுத்தப்பட்டது. அந்த தேர்தலில், தி.மு.க., கோடி கோடியாக பணத்தைக் கொட்டியது. இதற்கு நல்ல பலன் கிடைத்ததால், அதைத் தொடர்ந்து நடந்த, மதுரை மேற்கு, மதுரை மத்திய தொகுதிகளில், இந்த நடைமுறையே பின்பற்றப்பட்டது. அதன் மூலம், தி.மு.க., அடுத்தடுத்து வெற்றிகளையும் ஈட்டியது.சட்டசபை தேர்தலிலும், இந்த நடைமுறையை பின்பற்ற முயற்சிகள் நடந்தன. ஆனால், தேர்தல் கமிஷன் இதற்கு முட்டுக்கட்டை போடும் வகையில், பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது.

No comments:

Post a Comment