நமது நாட்டில் அரசியல்வாதிகள் ஈடுபடும் பொருளாதார குற்றங்கள் பெருகுவதற்கு ஒரு முக்கிய காரணம் நமது நீதி மன்றங்கள் ! எருமை மாட்டை வீட மிகவும் தாமதமாக இயங்கும் நீதிபதிகள், திறமை அற்ற நீதிபதிகள் , ஊழல் நீதிபதிகள் மற்று அரசியல் தொடர்பு உடைய நீதிபதிகள் ! " தாமதபடுத்தபட்ட நீதி தடுக்கப்பட்ட நீதி " என்பது பழைய மொழி . " தாமதபடுத்தப்பட்ட நீதி விலை பேசப்படும் நீதி " என்பது புது மொழி. துரஷ்டவசமாக நமது சட்டங்கள் " நீதிபதிகள் ஊழல் செய்வதற்கும், திறமை அற்றவர்களாக இருப்பதற்கும் துணை போகிறது " .கொள்ளை அடித்து குற்றம் புரிந்தவர்கள் கவலை எல்லாம் எப்படி தப்பிக்கலாம் என்று கணக்கு போடுகின்றார்கள் - அந்த அளவுக்கு இந்த நாட்டில் நீதி, நேர்மை சீர் கெட்டு போயுள்ளது.
ஒரு கம்பெனியில் முதலீடு செய்யவேண்டுமென்றால் எந்த உத்தரவாதமும் கேட்பதில்லை. கனிமொழியின் வாதமே, நாங்கள் பங்கு பரிவர்த்தனைக்காக பணம் பெற்றோம். உடன்பாடு வராததால் பணத்தை கடனாக பாவித்து வட்டியுடன் திருப்பி கொடுத்து விட்டோம் என்பது தான். ஊழல் பணத்தை யாரும் உள்ளூர் வங்கிக்கணக்கில் வாங்க மாட்டார்கள் என்பது இங்கு பதிவு செய்துள்ள அறிவு ஜீவிகளுக்கு புரியவில்லை. மேலும் கம்பெனி சட்டத்தின் கீழ் பதிவு செய்ப்பட்ட நிறுவனம் ஒருவரிடம் பணம் வாங்கினால் கடனாளர்(debtors ) அல்லது பங்குதாரர் (shareholder ) ஆகத்தான் கணக்கில் காட்டமுடியும் என்பது கணக்கியல் வரையறை (accounting Standards ) விதி. இதில் யாரும் தப்ப முடியாது. ஊழல் பணத்தை வாங்கி யாராவது ஷேர்ஸ் கொடுப்பார்களா? அல்லது காலம் முழுவதும் கடனாளர்களாக காட்ட்த்தான் முடியுமா? கணக்கியல் தெரிந்தவர்களுக்கு இந்த விஷயம் புரியும். விதண்டாவிதமாக கருத்து சொல்லும் கந்தசாமிகளுக்கு எப்படி புரியும்.
No comments:
Post a Comment