"அந்த அம்மா தான் (ஜெயலலிதா) இதயமில்லாமல் பேசி என்னை நோகடிக்கிறார் என்றால், பத்திரிகையாளர்களாகிய நீங்களும் இப்படி இரக்கமின்றி பேசி நோகடிக்கிறீர்களே... உங்களுக்கெல்லாம் இதயமே இல்லையா' என, நொந்து போய் பேசியிருக்கிறார் கருணாநிதி.
தனக்கென வரும்போது மட்டும் வேதனை, மற்றவர்களுக்கு வந்தால் கண்டு கொள்ளாமல் இருப்பது நியாயமா?
"வாய்தா ராணி' என்ற பட்டம் ஜெயலலிதாவுக்கு மட்டும் தான் பொருந்த வேண்டுமா என்ன?
மதுரையில், இந்திரா மீது கொலை வெறித் தாக்குதல் நடத்த போது, "இந்திராவுக்கு எங்கிருந்து ரத்தம் வடிந்தது' என, எள்ளி நகையாடினரே, தி.மு.க., தலைவர்கள், அவர்களுக்கு இதயம் இருந்ததா?
"விதவை மறுவாழ்வுத் திட்டத்தின் மூலம், இந்திராவுக்கு பண உதவி செய்வோம். அவர் அதற்கு மனு செய்ய வேண்டும்' என, பேசிய தி.மு.க., தலைவர்களுக்கு இதயம் இருந்ததா?
"மனைவியை இழந்த நேருவும், கணவனை இழந்த பண்டாரநாயகாவும், தனி அறையில் என்ன பேசியிருப்பர்' என, தம்பிக்கு மடல் எழுதி மகிழ்ந்தாரே அண்ணாதுரை, அவருக்கு இதயம் இல்லையா?
கட்சியிலிருந்து வெளியேற்றிய போது, தி.மு.க., தலைவர்களுக்கு இளகிய இதயம் இருந்ததா?
No comments:
Post a Comment