Monday, 9 May 2011

கருணாநிதி; தாயும், மகளும், மற்றுமுள்ளவர்களும் படும் வேதனையைக் காணச்சகிக்கவில்லை'

"2 ஜி ஸ்பெக்ட்μம்' வழக்கு, தமிழக முதல்வர் கருணாநிதியின் வீட்டுக்குள்ளேயே புகுந்துவிட்டது. அவμது அருமை மகள் கனிமொழி, கூட்டுச்சதியில் ஈடுபட்டதாக கூடுதல் குற்றப்பத்திரிகையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளார். இதுவøμ, சாதிக் பாட்ஷா, μõஜா, அவμது சகோதμர் என தி.மு.க., சுற்றுவட்டாμங்களையே சுற்றிவந்த சி.பி.ஐ., இம்முறை, அக்கட்சித் தலைவரின் வீட்டுக்குள்ளேயே புகுந்துவிட்டது. நேμடியாக குற்ற வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளார் கனிமொழி. இப்போது என்ன செய்யப்போகிறது தி.மு.க.,?

கருணாநிதி. "சில நாட்களாகவே சி.ஐ.டி., காலனி இல்லத்துக்குப்போகவில்லை. தாயும், மகளும், மற்றுமுள்ளவர்களும் படும் வேதனையைக் காணச்சகிக்கவில்லை' என்பதாக அவர் கவலைப்பட்டிருந்தார். கனிமொழி கைதாவாரா? கருணை காட்டப்படுமா? சட்டம் கைகொடுக்குமா? மத்திய அரசு கைவிடுமா? என, ஏராளமான கேள்விக்குறிகள் அறிவாலயத்தைச் சுற்றி எழுந்துகொண்டிருக்கின்றன.

ராஜபக்ஷே கிட்ட தமிழர்களை காட்டி கொடுக்கலாம், ஆனா உங்க கட்சி (DMK) கொள்ளைய காட்டி கொடுக்காதீங்க. இலங்கைத் தமிழருக்காக இவர் நடத்திய 2 மணி நேர உண்ணாவிரதத்தை ஜெயலலிதா கபடநாடகம் என்று சொன்னதைத் தமிழருக்கு நினைவூட்டத் தவறாத முதல்வர், தமிழினத்தைப் பாதிக்கும், தமிழனுக்கு இழைக்கப்பட்ட அநீதியைச் சுட்டிக்காட்டும் ஐ.நா. குழு விசாரணையைவிடத் தனது குடும்பத்தினரைப் பாதிக்கக்கூடிய முக்கியமான விசாரணைகள் நடைபெற்று வருவதுகூட அதற்குக் காரணமாக இருக்கலாம்.

கனிமொழி ஒருவரைத் தவிர, குற்றம்சாட்டப்பட்டவர்கள் எவருமே வெளியில் இல்லை. இவர்களில், முதல் எதிரியாகச் சேர்க்கப்பட்டுள்ள ராஜா ஒருவர் தான், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் முன்பே கைது செய்யப்பட்டவர்கள். மற்றனைவரும் குற்றப்பத்திரிகைக்குப் பிறகு கைதானவர்களே. அந்த வகையில், கனிமொழி கைதாவதற்கும் அதிகளவு வாய்ப்புகள் உள்ளன. "குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டாலே, விசாரணை அதிகாரியின் வேலையில் பாதி முடிந்துவிடுகிறது. அதன் பிறகும் கைதின் அவசியம் என்ன?' என்ற வினா எழுப்பப்படுகிறது. குற்றம் நிரூபிக்கப்படுவதற்கு, இரண்டு அம்சங்கள் முக்கியமானவை. ஒன்று, விசாரணை. இன்னொன்று சாட்சிகள். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுவதன் மூலம், விசாரணை வேண்டுமானால் பெருமளவு முடிந்திருக்கலாமே தவிர, சாட்சிகள் கலைக்கப்படும் அபாயம் தொடரவே செய்யும். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பிறகும் கைது நடவடிக்கை மற்றும் சிறைவாசம் கொண்ட வழக்குகள், ஏராளமான முன்னுதாரணங்களாக உள்ளன.

காங்கிரசின் சாமர்த்தியம். ஸ்பெக்ட்ரம் ஊழலை, தனியொரு ஆளாக ராசா செய்திருக்க முடியாது என்பது உலகறிந்த உண்மை. இதைத் தான், தமிழக முதல்வர் கருணாநிதியும் சொன்னார். மேலும், தன்னை விட சக்திவாய்ந்தவரின் தலையீடு இல்லாமல், பிரதமரும் மவுனமாக இருந்திருக்க மாட்டார். அந்த வகையில், அனைத்து விரல்களும் நீள்வது, ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியாவை நோக்கித்தான்.


No comments:

Post a Comment