Wednesday, 25 May 2011

ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிக்கிய கனிமொழியின் கைது சம்பவத்தில், காங்கிரஸ் எதுவும் செய்ய முடியாது நிருபர்களிடம் வெளிப்படையாக தெரிவித்தார்.

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கூட்டுச்சதி செய்தவர் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ள ராஜ்யசபா தி.மு.க., எம்.பி.,யான கனிமொழி தற்போது டில்லி திகார் சிறையில் உள்ளார். ஜாமின் மனு கோரிக்கையை சி.பி.ஐ., கோர்ட் நிராகரித்துவிட்டதையடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை முதல் அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கனிமொழியை சந்திப்பதற்காக அவரது தந்தையும், தி.மு.க., தலைவருமான கருணாநிதி கடந்த திங்கள்கிழமை காலை டில்லி வந்தார். உருக்கத்துடன் நடைபெற்ற இந்த 45 நிமிட சந்திப்பை முடித்துக் கொண்டு, தான் தங்கியிருந்த ஓட்டலுக்கு கருணாநிதி திரும்பினார்.

சுப்ரீம் கோர்ட்டால் கண்காணிக்கப்படுவதால் குற்றவாளியை காப்பாற்ற முடியவில்லையாம்.இல்லாவிட்டால்....? ஒரு பொறுப்புள்ள மத்திய அமைச்சரின் பேச்சா இது?வெட்ககேடு.தகுந்த கண்காணிப்பு இல்லை என்றால் என்ன அநீதி வேண்டுமானாலும் செய்யமுடியும் என்பதை பகிரங்கமாக ஒப்புகொள்கிறார்.தப்பு செய்து அகப்பட்டு கொண்டவரிடம் நல்ல புத்தி சொல்லி வழியனுப்புவதை விட்டுவிட்டு,கோர்ட்டு நடவடிக்கைக்கு முன்னரே வந்திருந்தால் செய்யவேண்டியதை செய்து தந்திருப்போம் எனும் பொருளில் அல்லவா சமாதானம் தந்திருக்கிறார்.மத்திய அமைச்சரின் பேச்சு உண்மைஎனில் வன்மையாக கண்டிக்கபட வேண்டிய ஒன்று. கருணாநிதி தொகுதி பக்கம் போயி மக்கள் எப்படி இருக்காங்கன்னு பார்க்காம, டெல்லியில டேரா போட்டு, கூட்டு சதி பண்ணி நாட்டை திருடுன பெத்த மகளை பார்த்து கண் கலங்குறாரு. நல்ல ஜன நாயக நாடுடா இது..

சிறையில் வாடும் தன் மகள் கனிமொழியைச் சந்திப்பதற்காக, டில்லிக்கு வந்திருந்த தி.மு.க., தலைவர் கருணாநிதியை, தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளரான குலாம்நபி ஆசாத் சந்தித்து பேசினார். ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிக்கிய கனிமொழியின் கைது சம்பவத்தில், காங்கிரஸ் எதுவும் செய்ய முடியாது நிருபர்களிடம் வெளிப்படையாக தெரிவித்தார்.

No comments:

Post a Comment