Saturday, 14 May 2011

ஆட்சியை பறித்தது? DMK


  1. என்ன நக்கல்... மீனவன் செத்தா, பேராசை ன்னு பதில்..
  2. 2009 மே மாதத்தில் இலங்கை தமிழர்களை ஏமாற்றினார், அவர்கள் கண்ணீர் விட்டார்கள் மாண்டார்கள் , அந்த கண்ணீரால் 2011 மே இல் கண்ணீர் விடுகிறார்.
  3. என்னை போன்ற சாமானியர்களால் ஒருலட்சத்து எழுபத்திஆறாயிரம் கோடிக்கு எத்தனை சைபர் என்று கண்டுபிடிக்க முடியாமல் கத்திரி வெயிலில் மண்டை காய்ந்தது முதல் காரணம்..
  4. முதல்வர் பணியை ஒழுங்கா செய்யாம 'உளியின் ஓசை', 'பாசக்கிளிகள்','இளைஞன்' என மொக்க படமா எடுத்து,அதற்கும் ' நூறாவது நாள்' விழா கொண்டாடி எங்களை டார்ச்சர் செய்தது..
  5. நிருபர்கள் எங்கே எடக்குமுடக்கா கேள்வி கேட்ப்பார்களோ என்று நினைத்து இவரே தினம் தினம் கேள்வி-பதில் வெளியிட்டு அறிக்கை எங்களை படுத்தியது.
  6. வெங்காய விலை உயர்ந்தால், 'பெரியாரிடம்' போய் கேள் என நக்கலடித்தது,இதை கேட்டதும் வெங்காயத்தை உரிக்காமலே எங்கள் கண்ணில் நீர் வந்தது
  7. மதுரையில் 'எதோஒரு நெஞ்சர்' தேர்தலுக்கு பின் அ.தி.மு.க.என்ற கட்சியே இருக்காது என் பேட்டி கொடுத்து எங்களை கடுப்பேத்தியது.
  8. ராத்திரி ஒரு மணிக்கு கரண்ட் போயி கொசுக்கடியில் தூங்கமுடியாமல் எங்களை 'மல்லாக்க படுத்து விட்டத்தை' பார்த்து யோசிக்க வைத்தது. பல..மொத்தத்தில் ' நமக்கு நாமே' திட்டத்தில் 'தமக்கு தாமே' பாசதலைவரும்,பாசக்குடும்பமும் ஆப்பு வைத்து கொண்டனர்.
  9. ஒட்டு எண்ணிக்கையின் பொது 'மான்களையும் மயில்களையும்' ஆடவிட்டு பார்த்த ஒரே முதல்வர்.
  10. செம்மொழி மாநாடுன்னு கூத்து அடிச்சதில 650 கோடின்னு வெட்டியா மக்கள் பணத்தை செலவு. கனிமொழி பத்தி ஒரு பெண் பேராசிரியை பிரசென்ட் பண்ணின ஆராய்ச்சி கட்டுரையே சாட்சி...ஜால்ரா அடிக்கவும், காக்கா பிடிக்கவும் மக்கள் பணத்தில செலவா...

No comments:

Post a Comment