Monday, 2 May 2011

musharraf condems binladen death































இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ரகசியமாக தங்கி இருந்த ஒசாமா பின்லேடனை அமெரிக்க உளவு பிரிவு படையினர் திடீர் தாக்குதல் நடத்தி வேட்டையாடியிருக்கின்றனர். இதனால் பாகிஸ்தான் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளது. இஸ்லாமாபாத் அருகே 150 கி.மீட்டர் தொலைவில் உள் அப்பட்டாபாத்தில் உள்ள ஒரு பங்களாவில் இருந்தபோது கொல்லப்பட்டான். இவனை வேட்டையாடும் அரங்கேற்றம் குறித்து பாக்., அதிகாரிகளுக்கு கடைசிவரை தெரிவிக்கப்படவில்லை . தாக்குதல் ஆப்ரேஷன் முடியும் வரை ரகசியமாகவே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

யாரும் நுழைய முடியாத வகையில் வீடு : வெளி தொடர்புக்காக சில, நம்பிக்கையான உதவியாளர்களை மட்டும் வைத்திருந்தார். அவர்கள் மூலம் தான் எந்த தகவலும் வெளியே செல்லும் அல்லது ஒசாமாவுக்கு கிடைக்கும். கூரியர் தபால் மூலம் மட்டுமே இவருக்கு தகவல்கள் வந்தன. அது மூலமே இவரும் தகவல்களை அனுப்பினார். தபால் கொண்டு செல்லப்படுவதை நான்கு ஆண்டுளாக அமெரிக்க உளவுப் படைகள் கண்காணித்தன. இதன் மூலம் தான், ஒசாமா பதுங்கியிருந்த வீடு தெரிய வந்தது. இந்த வீடு 2005ல் கட்டப்பட்டது. அருகில் இருந்த வீடுகளை விட, 8 மடங்கு பெரியது. வீட்டை முதலில் பார்த்த அமெரிக்க படைகளே ஆச்சரியம் அடைந்தன. காரணம், வீட்டைச் சுற்றி 12 அடி உயர சுவர் கட்டப்பட்டிருந்தது. யாரும் நுழைய முடியாத வகையில், இரண்டு அடுக்கு "கேட்' அமைக்கப்பட்டிருந்தது. வீட்டில், போன் அல்லது இன்டர்நெட் இணைப்புகள் இல்லை. குப்பை கூட வெளியே செல்லக் கூடாது என்பதால், அவை வீட்டுக்கு உள்ளேயே எரிக்கப்பட்டன. அவ்வளவு பாதுகாப்பு இருந்தும், ஒசாமாவை அமெரிக்க படைகள் கண்டுபிடித்து அழித்து விட்டன.

பின்லாடன் மரணம்: அமெரிக்காவுக்கு முஷாரப் கண்டனம்:

அரசிற்கு தெரிவிக்காமல் பாகிஸ்தானில் அமெரிக்கா தாக்கதல் நடத்தியிருப்பதற்கு பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப் கண்டனம் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் உள்ள அபோதாபாத்தில் அந்நாட்டுக்கு தெரிவிக்காமல் அமெரிக்க உளவுத்துறையினர் தாக்குதல் நடத்தி அல்கொய்தா பயங்கரவாத இயக்க தலைவர் பின்லாடனை சுட்டு கொன்றனர். இது தொடர்பாக லண்டனில் வசிக்கும் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் கூறுகையில், பின்லாடனை கொன்ற விஷயம் வரவேற்க்கத்தக்கது. இது பயங்கரவாதத்திற்கு கிடைத்த மிகப்பெரிய அடி. ஆனால் பாகிஸ்தான் அரசிற்கு தெரிவிக்காமல் பின்லாடன் மீது அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தியது பாகிஸ்தானின் இறையாண்மையை மீறிய செயலாகும்.

அல்-குவைதா துவங்கி வளர்ந்த வரலாறு : 1979: ஆப்கானிஸ்தானில் முஜாகிதீன் என்ற பயங்கரவாத அமைப்பை எதிர்த்து சோவியத் யூனியன் போரிட்டது. இந்த பயங்கரவாத அமைப்போடு பின்லேடனும் இணைந்து கொண்டார்.


1986-87: சோவியத் யூனியனுக்கு எதிரான போரில், முஜாகிதீன் அமைப்பின் , நிதி நிர்வாக தலைவராக செயல்பட்டார். கொரில்லா படை தலைவராகவும் திகழ்ந்தார்.


1988: முஜாகிதீன் அமைப்பிலிருந்து வெளியேறியவர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் துணையுடன் ஒசாமா பின்லேடன், அல்-குவைதா என்ற பயங்கரவாத அமைப்பை தொடங்கினார்.


1989: சோவியத் யூனியன், ஆப்கானிஸ்தானில் இருந்து படைகளை திரும்பப் பெற்றுக்கொண்டது. பின்லேடனும் சவுதிக்கு திரும்பினார். அவரது தந்தையின் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்தை பார்த்துக்கொண்டார். ஆப்கன் போரில் தனது நெட்வொர்க் மூலம் நிதி ஆதாரத்தை பெருக்கினார்.


1990 ஆக.7: குவைத்திலிருந்து ஈராக் படைகள் வெளியேற வலியுறுத்தி, ஈராக் படைகளுக்கு எதிராக போரிடுவதற்கு சவுதிக்குள் நுழைய அமெரிக்க அரசு அனுமதி கேட்டது. சவுதி அனுமதியை தொடர்ந்து அமெரிக்க படைகள் ஈராக் படைகளுக்கு எதிராக போரிட்டது. சவுதியின் மெக்கா, மெதினா நகரங்களுக்கு அருகில் அமெரிக்க படைகள் இருப்பதற்கு பின்லேடன் எதிர்ப்பு தெரிவித்தார்.


1991 : சவுதி அரசுக்கு எதிராக போரட்டம் நடத்திய ஒசாமாவுக்கு குடியுரிமையை, சவுதி அரசு ரத்து செய்தது. சூடானில் பின்லேடன் தஞ்சம் அடைந்தார்.


1992, டிச. 29: ஏமன் நாட்டிலுள்ள ஒரு ஓட்டலில் குண்டு வெடித்தது. இதில் இரண்டு ஆஸ்திரிய சுற்றுலாப்பயணிகள் கொல்லப்பட்டனர். இது பின்லேடன் மற்றும் அவரது அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் என அமெரிக்க உளவுத்துறை குற்றம் சாட்டியது.


1993, பிப். 26: அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக மைய கட்டடத்தின் மீது தாக்குதல் நடதத்தப்பட்டது. இதில் ஆறு பேர் பலியாகினர். 1000க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.


1995 கென்யா மற்றும் தான்சானியா ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரங்களில் ஒரே நேரத்தில் குண்டு வெடித்தது. இதில் கென்ய அமெரிக்க தூதரக தாக்குதலில் 213 பேர் பலி, 4,500 பேர் காயம். தான்ஜானியா அமெரிக்க தூதரகத்தில் 11 பேர் பலி, 85 பேர் காயம்.


1996 : அமெரிக்கா மற்றும் சவுதி ஆகிய நாடுகளின் வேண்டுகோளை அடுத்து சூடான், ஒசாமாவை வெளியேற்றியது. இதனால் பின்லேடன் தனது 3 மனைவி மற்றும் 10 குழந்தைகளுடன் ஆப்கானிஸ்தானில் தஞ்சம் அடைந்தார். அமெரிக்காவுக்கு எதிராக "புனித போர்' நடத்தப்போவதாகவும் அறிவிப்பு.


2000, அக். 12: ஏமனில் கப்பல் வழி தாக்குதல் நடத்தப்பட்டது. 17 பேர் பலி. அல்-குவைதா தாக்குதலுக்கு பொறுப்பேற்றது.


2001, செப். 11: அல்-குவைதா பயங்கரவாத அமைப்பினர், அமெரிக்காவின் 4 விமானங்களை கடத்தி, இரட்டை கோபுர கட்டடத்தின் மீது தாக்குதல் நடத்தினர். இதில் 3000க்கும் மேற்பட்டோர் பலி. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம்.


2001, அக். 7: அமெரிக்க மற்றும் பிரிட்டன் நாடுகள் இணைந்து ஒசாமா மற்றும் அல்-குவைதா பயங்கரவாத அமைப்பை எதிர்த்து போராடுவதென முடிவெடிக்கப்பட்டது.


2004, அக். : இரட்டைக்கோபுர தாக்குதலுக்கு பொறுப்பேற்பதாக, முதல்முறையாக ஒசாமா பின்லேடன் அறிவிப்பு.


2011, மே 2: அமெரிக்க உளவுத்துறை நடத்திய தாக்குதலில் பின்லேடன் பலியானார் என அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவிப்பு.


அமெரிக்கா செயல் : முஷாரப் கோபம் :இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: பாகிஸ்தான் எல்லையைக் கடந்து அப்போதாபாத் வரை அமெரிக்க வீரர்கள் வந்து நடவடிக்கை எடுத்ததை ஒப்புக் கொள்ள முடியாது. அது பாகிஸ்தானின் இறையாண்மையை மீறிய செயல். அன்னியப் படைகள் பாக்., எல்லையைக் கடப்பதை பாக்., மக்கள் விரும்பமாட்டார்கள். அமெரிக்கப் படைகள் இந்த நடவடிக்கையை எடுத்ததும் சரியல்ல. பாகிஸ்தான் அரசுடன் இதுபற்றி கலந்து ஆலோசித்திருக்க வேண்டும்.அல் - குவைதா மற்றும் தலிபான்களுடன் பாக்., போரிடுகிறது. பின்லாடன் எப்படி அப்போதாபாத்துக்கு வந்தார் என்று எனக்குத் தெரியவில்லை. அவருடன் உள்ளூர் அதிகாரிகள் தொடர்பு வைத்திருப்பர் என்று நான் கருதவில்லை. ஆனால், உள்ளூர் மக்கள் தொடர்பில் இருந்திருக்கக் கூடும்.இவ்வாறு முஷாரப் தெரிவித்துள்ளார்.


அமெரிக்கா, பாக்.,கிற்கு தாலிபன் மிரட்டல்: செய்தி நிறுவவனத்திற்கு தாலிபன் செய்தி தொடர்பாளர் தொலைபேசி மூலம் விடுத்த தகவலில், பின்லாடன் மரணத்திற்கு பழிவாங்குவோம். இதற்காக அமெரிக்கா மற்றும் பாகிஸ்தானின் மற்றும் அந்நாட்டு ராணுவ படைகளின் மீது தாக்கதல் நடத்துவோம் என கூறியுள்ளார்.


பின்லாடன் மரணம் : அமெரிக்கா, பாக்.,கிற்கு தாலிபன் மிரட்டல்

பெஷாவர் : பின்லாடன் மரணத்தையடுத்து அமெரிக்கா மற்றும் பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தப்போவதாக தாலிபன் பயங்கரவாத இயக்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் அமெரிக்க படைகளால் அல்கொய்தா இயக்க தலைவர் ஒசாமா பின்லாடன் கொல்லப்பட்டார். இதனை தொடர்ந்து தாலிபன்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். செய்தி நிறுவவனத்திற்கு தாலிபன் செய்தி தொடர்பாளர் தொலைபேசி மூலம் விடுத்த தகவலில், பின்லாடன் மரணத்திற்கு பழிவாங்குவோம். இதற்காக அமெரிக்கா மற்றும் பாகிஸ்தானின் மற்றும் அந்நாட்டு ராணுவ படைகளின் மீது தாக்கதல் நடத்துவோம் என கூறியுள்ளார்.

No comments:

Post a Comment