Thursday, 5 May 2011

ஒசாமாவை உயிருடன் பிடித்த பிறகே கொன்றனர்: 12 வயது மகள் தகவல்

ஒசாமா பின் லேடனை அமெரிக்கப் படைகள் உயிருடன் பிடித்ததாகவும், அவரை ராணுவ ஹெலிகாப்டருக்கு கொண்டு செல்லும் முன் குடும்பத்தார் முன்னிலையில் சுட்டுக் கொன்றதாகவும் லேடனின் 12 வயது மகள் தெரிவித்துள்ளார். அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடனை அமெரிக்கப் படைகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சுட்டுக் கொன்றன. இந்நிலையில் ஒசாமாவின் மகள் சாபியா கூறிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒசாமாவின் 20 மகன் அம்சாவையும் சுட்டுக் கொன்ற அமெரிக்கப் படைகள் அவர்களது இரு உடல்களை மட்டும் ஹெலிகாப்டரில் கொண்டு சென்றதாகவும், அங்கு இறந்த கிடந்த மற்ற 4 பேரின் உடல்களை அங்கேயே போட்டுவிட்டுப் போய்விட்டதாகவு்ம் கூறியுள்ளார் சிறுமி.

வீட்டுக்குள் புகுந்து அறை, அறையாக சோதனையிட்ட அமெரிக்கப் படைகள் 3வது மாடியில் ஒரு அறையில் இருந்த பின்லேடனை உயிருடன் பிடித்து கூட்டி வந்ததாகவும், அவரை ஹெலிகாப்டரில் ஏற்றும் முன் சுட்டுக் கொன்றதாகவும் அந்தச் சிறுமி கூறியுள்ளார்.

பிடிபட்ட 8 குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு வயது 2 தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 8 குழந்தைகளில் இரு சிறுவர்கள் பின்லேடனின் குழந்தைகள் என்று தெரிகிறது. மற்றவர்கள், அவருடன் அந்த வீட்டில் வசித்த இரு சகோதரர்களின் குழந்தைகள் என்று தெரியவந்துள்ளது. அந்த இரு சகோதரர்களும் ஒரு பாதுகாவலரும் அமெரிக்கத் தாக்குதலில் கொல்லப்பட்டுவிட்டனர்.

முதலில் இந்த வீட்டில் உயிரோடு பிடிபட்ட அனைவரையுமே அமெரிக்கப் படைகள் தங்களுடன் கொண்டு செல்ல முயன்றதாகவும், ஆனால் ஒரு ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி அந்த வீட்டின் காம்பவுண்டில் விழுந்துவிட்டதால், அதை அங்கேயே விட்டுவிட்டதால், இடப் பற்றாக்குறையால் 10 பேரை விட்டுவிட்டுச் சென்றதாகத் தெரிகிறது.

No comments:

Post a Comment