மும்பையின் தென்பகுதியில், புகழ்பெற்ற மும்பா தேவி கோவில் அருகேயுள்ள ஜாவேரி பஜாரில், நேற்று மாலையில் குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் பலர் காயமடைந்தனர். இந்த ஜாவேரி பஜார் பகுதி, தங்க நகை மற்றும் வைர நகைக் கடைகள் நிறைந்த பகுதி. மாலை நேரம் என்பதால், மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதைத் தொடர்ந்து, மத்திய மும்பை தாதர் பகுதியில், அனுமன் கோவில் அருகே, கபுதார் கானா என்ற இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டாக்சி ஒன்றில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தது. இந்த இடம், தாதர் ரயில் நிலையம் அருகேயுள்ளது. மூன்றாவதாக சார்னி ரோட்டில், ஓபேரா ஹவுஸ் அருகே மற்றொரு குண்டு வெடித்தது. இந்த குண்டும் காரில் வைக்கப்பட்டிருந்ததாகவே கூறப்படுகிறது. அடுத்தடுத்து நடந்த இந்த மூன்று குண்டுவெடிப்பு சம்பவங்களில்,21 பேர் பலியானதாகவும், 100 பேர் காயம் அடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மூன்று குண்டு வெடிப்புகளும், மாலை 6.45 மணியில் இருந்து 7 மணிக்குள் நிகழ்ந்தன.
சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும், மகாராஷ்டிரா பயங்கரவாத எதிர்ப்புப் படையினர் விரைந்து சென்று, குண்டு வெடிப்பு நடந்த இடங்களைப் பார்வையிட்டனர்; தடயங்களை சேகரித்தனர். எப்படிப்பட்ட தன்மை கொண்ட குண்டு வெடித்துள்ளது என்பதை முதலில் கண்டறிய முடியாவிட்டாலும், பின்னர் தெரிய வரும்.இவ்வாறு போலீசார் கூறினர்.

No comments:
Post a Comment